என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Sunday, September 12, 2010

கடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி

(வண்ண மீன்களின் அணிவகுப்பின் இடையே நான்)

இதுவரை

யாரிடமும் அதுபற்றி சொல்லாமல் அறை திரும்பியதும் மருத்துவரிடம் சென்றோம். ஜலதோஷம் தீரும்வரை கண்டிப்பாக வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் டைவிங் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். மீறினால் மாத்திரைகளில் இருக்கும் வேதிபொருட்களால் (செடேட்டிவ் காம்பவுண்ட்ஸ்) டைவிங் சமயத்தில் பிரச்சனை வரும் எனவும் பயமுறுத்தினார்.



நண்பர்கள் என்னிடம் என்ன செய்ய போகிறாய் என்றனர். என்னையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் "மாத்திரை சாப்பிட்டால் தானே? எனக்கு டைவிங் பயிற்சி தான் முக்கியம்". எனது உறுதியை பார்த்து அவர்களும் விட்டு விட்டனர். கொதிக்க வைத்த நீரை பாட்டிலில் வைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் குடித்து கொண்டு சாமாளித்தேன். இரு நாட்களில் முழுமையான குணம் அடைந்தேன்.



பவளப் பாறைகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் டைவிங் என அனைத்தையும் கற்று தேர்ந்தேன். தினமும் நட்சத்திர ஓட்டல் வாசம், பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாகன வசதியென ராஜவாழ்க்கை வாழ்ந்தோம். ஏசி எப்பொழுதும் நடுநடுங்க வைக்கும் குளிரில் தான் இருக்கும் அதை கம்பளியை போர்த்தி கொண்டு அனுபவித்தோம். மாரிமுத்துவுக்கு ஒடிசலான தேகம் என்பதால் அவரால் அந்த குளிரினை தாங்க முடியாமல் தடுமாறுவார். நாங்கள் அயர்ந்து தூங்கும் போது அவர் எழுந்து போய் நிறுத்துவதும், முத்துராமன் அதை மீண்டும் போடுவதுமாய் விடியும். பயிற்சி முடிந்ததும் ஊர் சுற்ற கிளம்பி விடுவோம்.



கனகு எனும் என் கல்லூரி ஜூனியர் (முத்துராமனின் கிளாஸ்மேட்) அந்தமானில் வேலை பார்த்து வந்தார். அவரும் எங்களோடு பயிற்சியில் இருந்தார். அவர்தான் எங்கள் டூரிஸ்ட் கைடு, சும்மா சொல்லக் கூடாது "இப்போ நீங்க பார்த்து கிட்டு இருக்கிறது தான் அந்தமானின்...." அப்படியென்று தொழில் நுணுக்கத்தோடு சுற்றிக் காட்டினார். எங்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் சற்றும் சளைக்காத பிறவி அது.



கிட்டத்தட்ட ஒரு மே மாதம் முழுதும் கழிந்த நிலையில், இறுதி நாளும் வந்தது. மிகச் சிறப்பான பிரிவுபச்சார‌ விழா நடத்தி சான்றிதழ் தந்தனர். மேடையிலிருக்கும் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்த திடீரென நானும் அழைக்கப்பட்டேன். எனது டைவிங் இன்ஸ்ட்ரக்டருக்கு பொன்னாடை அணிவிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் இனிதே நிறைவேறியது. டைவிங் பயிற்சியில் தேர்வு பெற்று சர்டிபிகேட் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சி வார்த்தையில் அடங்காதது. அதிலும் “இது மாதிரி ஒரு டீம் எனக்கு ஆஸ்திரேலியாவில் கிடைக்கவில்லையே” என டைவிங் இன்ஸ்ட்ரக்டர் சொன்ன போது மிகவும் பூரிப்பாக இருந்தது.



டைவிங் பயிற்சியின் இடைவெளியில் அருகில் இருக்கும் தமிழக சிற்றுண்டியகத்தில் சூடான மசால் வடை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுப்பேன். ஆஸ்திரேலியர்களுக்கு அது மிகவும் பிடித்துப் போய் விட்டது. "அதில் பச்சை மிளகாய் இருக்கும், கவனம்" என்று சொல்வதற்குள் அந்த பெண் அதை சாப்பிட்டு முகம் சிவக்க, காரத்தில் அலறியது மறக்க முடியாத நிகழ்வு. மேலும் ஒரு நாள், நான் ஜலதோஷத்தால் காலையில் உணவருந்தவில்லை.

அந்த நேரத்தில் பசி மயக்கத்தில் இருட்டிக் கொண்டு வர ஒரு வழியாக சமாளித்து கொண்டு இருக்குப் போது அந்த பெண்ணும், இன்ஸ்ட்ரக்டரும் என்னாச்சு என விசாரித்து தொலைதூரத்தில் உள்ள கடைக்கு எங்களுக்கு தெரியாமலேயே நடந்து சென்று எனக்காக பிரட்டும் ஜூஸும் வாங்கி வந்து கொடுத்த போது உள்ளம் நெகிழ்ந்தேன்.



இதைக் கவனித்த முனைவர் வெங்கடராமன் எனும் மதுரைகாரர் Zoological Survey of India-வில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் இந்த பயிற்சியின் இந்திய ஒருங்கிணைப்பாளர். மிகவும் நல்ல மனிதர். நாங்கள் டைவிங் படிப்பதற்காக வீட்டில் பணம் வாங்கி வந்ததை கேள்வி பட்டு கனிவோடு விசாரித்து உங்களுக்கு இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என முயற்சி செய்தவர். இன்றளவும் என்னோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். துளியளவும் பந்தா இல்லாத அற்புதமான மனிதர். அவர் என்னிடம் வந்து "இவர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்கள் போய் பிரெட் வாங்கி வரவேண்டிய அவசியமே இல்லை. எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் பார்" என்றார்.



விழா சிறப்புற நிறைவேறியது. எங்களுக்கு கப்பல் இரண்டு நாட்கள் கழித்து தான். ஆனால் தங்கியிருந்த அறையை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அங்குள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்கு மாறினோம். இரண்டாம் நாள் புறப்படத் தயாரான போது மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு கப்பல் புறப்பாடு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டது. எனவே நாங்கள் தினமும் எல்லா இடங்களையும் சுற்றிபார்த்தும், பொருட்களை வாங்கி குவித்தும், ஜாலியாக இருந்தோம். கப்பல் டிக்கெட் ஏற்கனவே எடுத்து விட்டதால் ஓட்டல் அறைக்கு மட்டும் கணக்கு செய்து மீதி தொகைகளை செலவு செய்ய ஆரம்பித்தோம். கப்பல் புறப்பாடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், “வன் சதன்” அலுவலகத்தை தொடர்பு கொண்டோம்.



அவர்களும் துறைமுகத்தை தொடர்பு கொண்டு எங்களிடம் புயல் காரணமாக இரு கப்பல்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் டிக்கெட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரு இடியை இறக்கினர். பொதுவாக அந்தமானே ஒரு சிறைசாலை போலத்தான். ஆகாய வழி மற்றும் கடல் வழி மார்க்கமாக மட்டுமே வெளியுலகிற்கு பயணிக்க முடியும் என்பதால், பேரிடர் நேரங்களில் அரசாங்க உயரதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு அடுத்தபடியாக அந்தமான்வாசிகளுக்கும் அதற்கப்புறம் இடம் இருந்தால் நம்மை போன்ற சுற்றுலாவாசிகள். அதிலும் பணம் படைத்தவர், முக்கிய புள்ளியென முந்திக் கொள்வர். அந்தமானின் விமானநிலையம் மிகச் சிறியது, அதற்கு மேல் அதை தரம் உயர்த்தும் அளவுக்கு தரை வலுவானது அல்ல. எனவே குட்டி விமான சேவை மட்டுமே உள்ளது.



அதனால், ஆகாயமார்க்கம் நமக்கு கண்டிப்பாக கிடைக்காது, கப்பல் பயணமாவது கைகூடுமா? வீட்டிற்கு நல்லமுறையில் திரும்புவோமா? என்ற கவலை அனைவரையும் சூழ்ந்தது. எங்கள் கப்பல் ரத்தானதால் எங்களுக்கு அடுத்த கப்பலில் முன்னுரிமை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். எங்கள் நிலைமையை விட சுற்றுலா வந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலைமை என் கண்களில் நீரை வரவழைத்தது. மாத சம்பளத்தில் சிறுக சிறுக சேமித்து அரசாங்க சுற்றுலா திட்டத்தில் பணம் பெற்று மனைவி, வயதுக்கு வந்த மகள் மற்றும் சிறு பையன் என குடும்ப சகிதம் வந்து, கப்பல் ரத்தானதால் நாங்கள் தங்கியிருந்த இளையோர் விடுதி வார்டனிடம் கெஞ்சி கூத்தாடி அறை எடுத்து தங்கியிருந்தார்கள்.



பொதுவாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மட்டும்தான் அங்கே மிகவும் மலிவு விலையில் அறைகள் கிடைக்கும். அவர் கையிருப்பு முற்றிலும் கரைந்து விட்டதால் அவரால் வேறெங்கும் செல்ல இயலவில்லை. உணவுக்கு கூட வழியின்றி பிறரிடம் கேட்கவும் தன்மானம் தடுக்க, தவித்து நின்ற அவர் நிலையறிந்து உணவு வாங்கி குடுத்து, கைசெலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். அவர் “தம்பி, இந்த அந்தமான் பயணத்தை வாழ்நாளில் சத்தியமாக என்னால் மறக்க முடியாது, உங்களையும் தான்” எனக் கண்கள் பனிக்க கூறினார்.



பிறகு, எங்களுக்கு அரசாங்க விருந்தினர் என்ற முன்னுரிமையில் கப்பலில் இடம் கிடைத்தது. அந்த குடும்பத்திடம் விடைபெற்று கனத்த இதயத்துடன் கப்பல் ஏறினோம். அப்போது அந்த மனிதர் சொன்ன வார்த்தைகள் ஏனோ என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன “தம்பி, இந்த ஊரில் அதிகபட்சம் ஒரு வாரம் இருக்கலாம் அதற்குமேல் இருந்தால் நரகம்தான்”



அந்தமானில் முதற்கட்ட டைவிங் பயிற்சி முடித்த பின்பு, சில மாதங்கள் கழித்து இரண்டாம் கட்ட பயிற்சியை நானும் நண்பர் மாரிமுத்துவும் கோவாவில் பயின்றோம். பின்பு நீச்சலும், டைவிங்கும் எங்களுக்கு தினசரி வாடிக்கையாகி விட்டது.



அந்தமான் பயணத்திற்கு பிறகு, கப்பல் பயணம் மேல் எனக்கு இருந்த வெறுப்பு, இந்திய அரசின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் ஒரு மாதம் பயணித்த போதும், பிறகு லட்சதீவுகளுக்கு ஒரு கருத்தரங்கிற்காக பயணிகள் கப்பலில் சென்ற போதும் ஏற்பட்ட நல்ல அனுபவங்களால் மெல்ல மெல்ல மாறிவிட்டது என்றே சொல்வேன்.

ஒவ்வொரு நாள் டைவிங்கும் ஒரு அற்புதம் தான். தினமும் அதே உற்சாகத்தோடு கடலடியில் இருந்த தமிழன், தற்பொழுது அமீரகத்தின் கடலடி வளங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.



தங்களின் மேலான ஆதரவுக்கும் விமர்சனங்களுக்கும் நன்றிகள் பல.



முற்றும்



அன்புடன்


















(இடமிருந்து இரண்டாவது)

வில்சன்







21 comments:

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு வணக்கம் . கடல் என்பதே ஒரு அதிசயம்தான் அதற்குள்ளும் ஒரு அதிசயத்தை நேரில் சென்று ரசித்த ஒரு உணர்வையும் , தீர்ந்து போகாத மகிழ்ச்சியையும் தங்களின் பதிவு எனக்கு பரிசாக அளித்தது . மிகவும் ஆனந்தம் . கடந்த சில வாரங்களாக அதிக வேலை பளு தங்களின் சில பாகங்களை வாசிக்கும் வாய்ப்பு நழுவி சென்றிருந்தது . விரைவில் அனைத்தையும் வாசித்துவிடுவேன் . பகிர்வுக்கு நன்றி .

சௌந்தர் said...

இந்த அந்தமான் பயணத்தை வாழ்நாளில் சத்தியமாக என்னால் மறக்க முடியாது, உங்களையும் தான்” எனக் கண்கள் பனிக்க கூறினார்///
என்ன இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா

என்ன அண்ணா அதுக்குள்ள முடிந்து விட்டதா

Anonymous said...

ஒரு நல்ல தொடர் வில்சன்!
உங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் கிடைத்தது போல இருக்கு!
மற்றொரு தொடருக்காக காத்திருக்கிறோம் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனுபவங்களை தொகுத்து கூறிய அருமையான தொடர் .. மிகவும் ரசித்து படித்த தொடரும் கூட...

சிறுகுடி ராம் said...

கலக்கீட்ட மாப்ள... என்ன ஒரு அருமையான தொடர்...! சூப்பர். ரொம்ப ரசிச்சு முழு தொடரையும் மறுபடி ஒரு தடவ இப்பதான் படிச்சு முடிச்சேன்.

எனக்கும் இந்த மாதிரி கடலுக்கு அடியில போய் பாக்கனும்னு ஆசையா இருக்கு.. எப்ப கூட்டிட்டு போற?

சிறுகுடி ராம் said...

சீக்கிரம் இன்னொரு பதிவு போடு மாப்ஸ்..

சிறுகுடி ராம் said...

கடலுக்குள்ள இருக்கும் அழகு மற்றும் ஆபத்துக்கள் பற்றி இன்னொரு பதிவு போடு மாப்ஸ். நெறையா தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு.

Vimal said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் !

Chitra said...

கலக்கல் பதிவு! அருமையான படங்கள்! தொடரட்டும்!

ஜீவன்பென்னி said...

arumaiya kai pudichu ungalodu ennaiyum anthamaanukku koopittukittu poi paththiram marupadiyum koopittukittu vanthutteenga.

School of Energy Sciences, MKU said...

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி!!

Kousalya Raj said...

நான் வெகு தாமதமாக உங்கள் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன்...பிற பாகங்களையும் படித்து விடுகிறேன் விரைவில்....

உண்மையில் உங்கள் அனுபவம் வித்தியாசமானது தான். வாழ்த்துக்கள்.

:))

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் பதிவு! அருமையான படங்கள்!

Gold said...

மாபிள்ள உனது கதை சூப்பர் அதிலும் நீ கூறிய விதம் சூப்பர் ஓ சூப்பர்...

அருமை தொடர்க...

விஜய் தங்கவேல்

School of Energy Sciences, MKU said...

நன்றி கவுசல்யா மற்றும் குமார்.

School of Energy Sciences, MKU said...

மாப்ஸ் விஜய்... .வாப்பா வா...

School of Energy Sciences, MKU said...

பிழைதிருத்தம்: அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர் என்பதற்கு பதில் தவறுதலாக நிக்கோபார் என பாகம்-5 ல் குறிப்பிட்டு விட்டேன். தவறை சுட்டிக் காட்டிய தம்பிகள் ரகுராமன் மற்றும் கனகுவிற்கு எனது நன்றிகள்.

Unknown said...

என்ன அண்ணே இவ்வளவு அழகா தமிழ் எழுத தெரியுமுன்னு இப்பதான் தெரியும். ஒரு பகுதி தான் படிச்சேன் நல்லா இருக்கு. இந்த மாதிரி கதை எல்லாம் நேரில் காணும் பொது சொன்னால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா.

இப்படிக்கு
komala

Anonymous said...

thukulla mudinjathaa

Anonymous said...

Thodar kathainu illa ninaichen!!!

fuel digital vignesh said...

We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


Best Digital Marketing Agency in Chennai
Best Content Marketing companies in Chennai
Best SEO Services in Chennai
leading digital marketing agencies in chennai
digital marketing agency in chennai
best seo company in chennai
best seo analytics in chennai