என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Tuesday, July 6, 2010

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம் இது ஓர் நினைவுச் சின்னம்
காக்கைக்கும் கூகைக்குமாய் பாழடைந்த ஓர் இருப்பிடம்
பழுது பார்க்க முடியாது தொட்டாலே நொறுங்கிடும்
உரு மொத்தம் கலைந்திடும் மண்ணாகிப் போய் விடும்
சக்கரவாகம் இங்கிருந்தால் சாக்கடைதான் உணவாகும்
மாந்தர் கூடிட அஞ்சுவர் பெரும் வேகமெடுத்து ஓடுவர்
வேரொருவர் உட்புக வழியுமில்லை இதனிடம்
என்னவள் விட்டுப் போன வாசம் மட்டும் தங்கிடும்
என்றேனும் இடிந்திடும் அன்றேனும் வந்திடுவாய்
உன் முகங்காண விழிகள் மட்டும் மூடாமல் நிலைத்திடும்
நினைவுச் சின்னம் இது உன் நினைவுச் சின்னம்6 comments:

சிவராஜன் said...

arumaiyaana pathivu anna , super ,

சிறுகுடி ராமு said...

அருமைடா மாப்ஸ்...
///சக்கரவாகம் இங்கிருந்தால் சாக்கடைதான் உணவாகும்
மாந்தர் கூடிட அஞ்சுவர் பெரும் வேகமெடுத்து ஓடுவர்///
இந்த வரிகளில் உனது வாத்தைப் பிரயோகம் என்னை மிகவும் கவர்ந்தது...

///என்றேனும் இடிந்திடும் அன்றேனும் வந்திடுவாய்
உன் முகங்காண விழிகள் மட்டும் மூடாமல் நிலைத்திடும்///
இந்த வரிகளிலோ, உனது ஏக்கத்தைக் கண்கூடாகக்காண்கிறேன்... சபாஷ்டா...

ஜீவன்பென்னி said...

வில்சன் அண்ணே கவிதை பிரவாகமா ஓடுதே.

ஜீவன்பென்னி said...

கூகைக்கும் சக்கரவாகத்துக்கும் அர்த்தம் சொல்லுங்க.

Wilson said...

கூகையென்றால் ஆந்தை
சக்கரவாகம் என்பது இந்திரலோகத்துப் பறவை அது பனித்துளியை மட்டும் தான் உண்ணுமாம்

ஜீவன்பென்னி said...

நன்றிண்ணா.