என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Friday, July 9, 2010

இயந்திரப் பறவை - பாகம் 3



இதுவரை

          எனக்கு கண்ணயிருட்டிகிட்டு வந்துச்சு, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல. ரொம்ப‌ நேரங்கழிச்சுத்தான் முழிச்சேன். சுத்திப் பார்த்தா ஒரே புகைமண்டலமா இருக்கு. என்னை கூப்புட வந்தவுங்க எல்லாம் அங்க எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பதறிகிட்டு இருப்பாங்கனு நினைக்கிறப்போ, அழுகை அழுகயா வருது. ரொம்ப கஷ்டப்பட்டு அப்படியே ஊர்ந்து ஊர்ந்து மேலே வந்தேன்.

             ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கப் போற சந்தோஷத்துல வந்த எல்லாரும் இப்போ கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறதை கற்பனை செஞ்சு கூடப் பாக்க முடியலை. எனக்கு மட்டுமா? இன்னும் எத்தனை பேருக்கு என்னென்ன கவலையோ? தங்கச்சிக் கல்யாணத்துக்கு நகை கொண்டு வர்ர அண்ணன், ஜப்திக்குப் போற வீட்ட மீட்க வர்ற பையன், பொறந்து ரெண்டு வருஷமானப் புள்ளைய மொதல்முறையாப் பார்க்கப் போற அப்பானு எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு நிமிஷத்துல மாறிப் போயிருச்சு.

           அப்படியே நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னேறினேன். தூரத்துல போலீஸ்காரங்க நிறையப் பேரு ஆளுங்களை தேடியெடுத்துக் கிட்டு இருக்காங்க, சக்தியெல்லாம் கூட்டி கத்துறேன், ஆனா யாருக்கும் கேக்கலை. அந்த கூட்டத்துல‌ அப்பாவும் அண்ணனும் என்னைப் பதட்டத்தோட அங்கயும் இங்கயும் தேடி ஓடுறது மங்கலா தெரியுது. உடம்புல மிச்சமுள்ள சக்தியெல்லாம் கூட்டி முன்னேறினேன். இப்போ எனக்கு வலி படிப்படியா கொறையற மாதிரியிருக்கு, எந்திரிக்க முடியுது, எந்திருச்சு வேக வேகமா அவங்கப் பக்கத்துல ஓடுறேன்.

       "அப்ப்ப்பாபாஆஆஆ" னு ஏர்போர்ட்டே குலுங்க கத்துறேன். ஸ்டெரச்சர்ல போறவங்கள்ள என்னைத் தேடிக்கிட்டுயிருந்தவரு, சட்டுனு நிமிர்ந்து பார்த்த்துட்டு மறுபடியும் குனிஞ்சு தேட ஆரம்புச்சுட்டார். எனக்கு கண்ணீரும் அழுகையும் பொங்கிகிட்டு வருது, உடம்பெல்லாம் அழுக்காவும், கரியாவும் இருக்குறதுனால அடையாளம் தெரியல போல.

            அண்ணனைப் பார்த்து ஓடுறேன், கொஞ்சம் தொலைவுலயிருந்த எங்க அம்மாகிட்ட போய்கிட்டு இருக்கான். அம்மா பக்கத்துல என் சம்சாரம் மயக்கமா கெடக்குறது தெரிய, அங்கிட்டு ஓடுறேன். பக்கத்துல போய், அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து "அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு.

              மயக்கமா கெடக்குற சம்சாரத்தப் பார்த்தேன். ஆதரவா அவள் தலைய கோதி விடப் பார்த்தா... கை அவ மேல படவேயில்லை. அதுக்குள்ள அண்ணன் வந்து "மோசம் போயிட்டோம்மா, நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு தம்பி போய்ட்டாம்மா . . அவன் கருகி கெடக்குற லெட்சணத்தை வந்து பாருமா" னு கதறுறான். என்னால நம்பவே முடியலை, கிள்ளி பார்த்தா முடியலை, கத்துறேன், கதறுறேன், யார் காதுலயுமே விழலை.

          அப்போ, எங்களை தாண்டிப் போன போலீஸ்காரங்க "பைலட் மேலதான் தப்புப்பா. கண்ட்ரோல் ரூம்லயிருந்து சொல்றதை கேக்காம, பிளேனை திரும்ப மேலயேத்தி இப்படி பண்ணிட்டாரு. அதுனால பாவம், அவர் குடும்பத்துக்கு சேர வேண்டிய காசக் கூட நிப்பாட்டிருவாங்க" னு பேசிக்கிட்டாங்க‌.

             நான் பக்கத்துல போய் கத்துறேன் " அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க...."

           என்ன பிரயோசனம்? நாம்பாட்டுக்கு கத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான், எனக்கு உரித்தானவுங்களுக்கே நான் பேசுரது கேக்கலை, மத்தவுங்களுக்கு எப்படி கேக்கும்?. கடைசியா எங்குடும்பத்தை ஒரு தடவை பார்த்துட்டு அப்படியே மேலே பறக்குறேன். என் கண்ணீரைத் துடைக்க மேகங்கள் கூட இப்போ இல்லை.

தங்கள் ஆதரவிற்கு நன்றியுடன்
வில்சன்

12 comments:

ஜீவன்பென்னி said...

சொன்னதுக்கு பிறகும் சில பேரு பேசிக்கிட்டே இருப்பானுங்க எனக்கு கோவமா வரும். ஒரு தடவ பக்கத்துல இருந்தவனுக்கும் எனக்கும் சண்டையே வந்துடுச்சு. இதுலத்தான் தன் மேதாவித்தனத்த காட்டுவானுங்க.

dheva said...

விழிப்புணர்வு இல்லை..மாப்ஸ்....இந்த விசயத்தில் நம்ம மக்கள் கிட்ட கொஞ்சம் கூட விழிப்புணர்வு இல்லை..............பிளைட் லேண்ட் ஆகுறதுக்கும் முன்னால் செல் போனா எடுத்துகிட்டு காட்டுற பிலிம் இருக்கே.....இது இறங்கும் போது மட்டும் இல்லை பிளைட் மேலே ஏறும் போதும் அந்த கருமத்தை கையில வச்சுகிட்டு.......ஏர் கிராஃப்ட்ல எதுக்கு சொல்றாங்கன்னு ஒரு அடிப்படை பொது அறிவை அலட்சியம் பண்ணிட்டு.....மொபைல ஆன் பண்றதும்...ஆன் பண்றதும்னு ஒரே அட்டகாசம்......இந்தெ ரேடியோ வேவ்ஸ்.....பைலட்ட டிஸ்டர்ப் பண்ணுமேன்னு மக்களுக்கும் அதிகம தெரியாது மாப்ஸ்....

ஆன அத கதையின் கடைசியில நீ சொல்லியிருக்கிறது நச்............சரி....இருந்தாலும்... கருத்து வெகு ஜன மக்களை ரீச் ஆகாது.....என்பது என்னுடைய கருத்து...! ஏன்னா ஏர் கிராஃப்ட்ல போறவன் செல் போன் பேசக் கூடாதுன்ற விழிப்புணர்வை ஸ்ட்ராங்கா...சொல்ல வேண்டியது...விமான சேவை செய்பவர்கள்தான்.....ஆனால் அவர்கள் லேபர் செக்டார் என்று சொல்லக்கூடிய பாமர மக்களை கவரும் வகையில் ஊத்தி ஊத்தி கொடுத்து.....அவன் வெளில போய் சொல்லணும்....டேய்..மச்சான் இது செமபிளைட்டா..ன்னு இது ஒரு மார்கேட்டிங் உத்தி........


விபத்துக்கு காரணம் விமான நிறுவனங்களே....பாமரர்களையும் படித்தவர்களையும் அறிவுறுத்தி......ஒழுங்கா....கொண்டு போக வேண்டியது அவுங்க பொறுப்பு.............

கதையின் கரு..........விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் மொபைல் போன சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுங்க.....ப்ளீஸ்........இதை அருமையா சொல்லிட்டா...மாப்ஸ்.!


அருமையான கவரும் எழுத்தோட்டம் உன்னிடம் இருக்கிறது......இன்னும் கனமான பாமர மக்களின் பிரச்சினைகளை....வெளில கொண்டு வா...மாப்ஸ்!

வாழ்த்துக்கள்!

எல் கே said...

//....விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் மொபைல் போன சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுங்க.....ப்ளீஸ்........இதை அருமையா சொல்லிட்டா///

+1

எல் கே said...

உங்களைப் பற்றி எழுதி உள்ளேன் http://lksthoughts.blogspot.com/2010/07/iv.html

சௌந்தர் said...

அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து "அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு//

கலக்கிட்டிங்க பாஸ்.... சரியான விழிப்புணர்வு

School of Energy Sciences, MKU said...

ஜீவன்பென்னி, கார்த்திக், சௌந்தர் மற்றும் தேவா அனைவரின் கருத்துக்கும் நன்றி.

தேவா சொன்னது . . .
//ஆன அத கதையின் கடைசியில நீ சொல்லியிருக்கிறது நச்............சரி....இருந்தாலும்... கருத்து வெகு ஜன மக்களை ரீச் ஆகாது.....என்பது என்னுடைய கருத்து...! // . .

இல்லை தேவா, என்னைப் பொறுத்தவரை அமீரகத்தில் இருந்து பயணிக்கும் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூ வாசகர்கள் அல்லது வாசகர்களுடன் அறையை பகிர்பவர்கள். எனவே, ஓரளவாவது போய் சேரும் என்பது என் கருத்து. மேலும் எனது (3 முறை)விமான பயணங்களில் என்னை பெரிதும் பாதித்தது இந்த சாமானியர்களின் அலட்டல்கள். பெரும்பாலும் யாரும் எந்த விதியையும் கடைபிடிப்பதில்லை. பக்கத்திலிருப்பவர் கடைபிடித்தால் நக்கலாய் ஒரு பார்வை "என்ன பிளைட்டுக்கு புதுசா" என்பது போல்.

// விழிப்புணர்வை ஸ்ட்ராங்கா...சொல்ல வேண்டியது...விமான சேவை செய்பவர்கள்தான்.....ஆனால் அவர்கள் லேபர் செக்டார் என்று சொல்லக்கூடிய பாமர மக்களை கவரும் வகையில் ஊத்தி ஊத்தி கொடுத்து.....அவன் வெளில போய் சொல்லணும்....டேய்..மச்சான் இது செமபிளைட்டா..ன்னு இது ஒரு மார்கேட்டிங் உத்தி........//

இது 100% உண்மை

விஜய் said...

கலக்கி இருகீங்க, நிஜமா சூப்பர் ஆனா கதை வடிவமைப்பு ...ஏதாவது தவறு இருந்தா தேவ அண்ணா சொல்லிடுவாருன்னு தெரியும் ,அதானால உங்க திறமைய பாராட்டி ஆகணும் ...
இன்னும் நிறையா எழுத என் வாழ்த்துக்கள்

ஷாஜி said...

Why dont they install Jammer device(which restricts the mobile signal) in flight?

aavee said...

எளிய நடையில் ரொம்ப அருமையா இருக்கு.

Jey said...

" அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க...."////

இந்த மாதிரியான மக்கள் நம்மூர்ல கூடிபோய்ட்டாங்க, ஏதாவது விபரீதம் , நடந்தா மட்டுமே ஞானம் வரும், வாய்வலிக்க கத்தி சொல்லும்போது, நக்கல் பன்னி டென்ஷன் ஏத்துவாங்க.

Anonymous said...

இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்றவர்களை தான் திரையுலகம் தேடி கொண்டு இருக்கிறது ...

அருமை ! அருமை ! நின் தமிழ் சேவை வாழி!

Vimal said...

இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்றவர்களை தான் திரையுலகம் தேடி கொண்டு இருக்கிறது ...

அருமை ! அருமை ! நின் தமிழ் சேவை வாழி!