என்னைப் பற்றி
- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Blog Archive
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Wednesday, July 14, 2010
கடவுள் இருக்கிறார்
இந்த தலைப்பை பார்த்ததும் அநேகருக்கு குஷியாக இருக்கும் (வறுத்தெடுக்க ஒருத்தன் சிக்கிட்டான்டா) என்று. ஆனால், அதுதான் உண்மை! கடவுள் இருக்கிறார்!!. குரங்கிலிருந்து மனிதன் வந்தான், பிரபஞ்சத்தில் நடைபெற்ற அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாகின என்பதெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விதண்டாவாதங்களுக்கு மத்தியில், எல்லாவற்றிற்கும் ஒரு மூலம் உண்டு, அந்த ஆதிமூலம் தான் கடவுள். விஞ்ஞான வளர்ச்சியால் நிலவில் கால் வைத்தவன் கூட முதலில் கடவுளுக்கு நன்றி சொன்னேன் என்கிறான். சரி, கடவுளை அவனை யார் கண்டது? எங்கே கடவுளை என் முன்னாள் வரச்சொல்லுங்கள் பார்ப்போம் என பலர் கூவலாம். கடவுள் என்பதை பிரித்தால் “கட-உள்” என வரும். உள்ளத்தைக் கடந்து ஆழமாய் பயணித்து பார்த்தால் புரியும். ஒவ்வொருவரின் உள்ளமும் கடவுள் வாழும் ஆலயமே என்று.
இறைவன் எங்கும் நிறைந்தவன் “காற்றைப் போல” உணர முடிந்தவர்களுக்கு அவன் ஒரு ஒப்பற்ற அனுபவம். இன்று நாத்திகம் பேசும் பலரும் “கோயில் வேண்டாம் எனச் சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது என்று சொல்கிறேன்” என்றும் “கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்” என்றும் சப்பைக் கட்டு கட்டுவர்.
கடவுள் மறுத்த பெரியார் கூட, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது வரலாறு. அதற்கு அவர் கூறிய விளக்கம், இந்த மதத்தில் சாதி பாகுபாடு இல்லை, அனைவரும் ஒரே நிலையில் மதிக்கப்படுகின்றனர் என்பதாகும். ஆக, மிகப் பெரிய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு என்பது இறைவனின் பெயரால் மனிதனை கொடுமைப் படுத்தும் அவலத்தை களையவே. இவர்களும் ஏதோ ஒரு தருணத்தில் கடவுளைக் கடந்துதான் போகின்றனர்.
ஆனால், மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மலிய விடக் கூடாது. அந்த “மதம்” நமது மனத்தில் இருக்க வேண்டுமேயொழிய மண்டைக்குள் ஏறக் கூடாது. மதம் யானைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தலைக்கேறினால் விளைவுகள் விபரீதமாகும்.
இருப்பினும், சமயம் என்பது மனிதனை பண்படுத்துகிறது, நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என நினைப்பவன், நேரிய பாதையில் செல்வான். ஒரு பயம் இருக்கும், நம்மை ஒரு சக்தி காக்கின்றது அது நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணி தவறு செய்ய மாட்டான். உடனே ஒரு கேள்வி எழும், நாத்திகம் பேசும் நாங்களா கோயிலை இடிக்கிறோம்? மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை வன்முறைகள்? இதைத்தான் உங்கள் கடவுள் விரும்புகிறாரா என்று.
பக்குவமில்லா அரைவேக்காட்டு ஆசாமிகள் மலிவான விளம்பரத்திற்காக தூண்டிவிடும் செயல்கள் இவையென்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு அரசியல் கட்சி பிரபலமாக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மதத்தின் பெயரால் ஆடிய ஆட்டத்தின் உள்நோக்கம் என்ன? கோயில் கட்டுவதா? இல்லை ஆட்சியை பிடிப்பதா?
அடுத்தது சாமியார்கள், இவர்களைப் பற்றி பேசினாலே நமக்கு ஏதோ ஆபாசப் படம் பார்க்கிற உணர்வு வரும். மக்களின் மனது, ஒரு தூய வெண்ணிற வேட்டியில் இரு சொட்டு மை இட்டால் அதைத்தான் காணும். அது போல ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற துறவிகளை மறக்கடிக்கப் படுகிறோம். துறவி என்பவர் முற்றும் துறந்தவராய், ஒட்டிய வயிறும் ஒடிசலான தேகமும் கொண்டு இருப்பார். பசித்திருப்பார், எப்போதும் இறைவனை நினைத்து, தியானித்து, தவம்செய்து, கிட்டத்தட்ட ஒரு யாசகனைப் போல இருப்பர். ஆனால், ஏக்கர் கணக்கில் ஆசிரமம், சிஷ்ய கோடிகளின் புதிய சூழ ஆடம்பர பவனி, இவையெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென போலிகளை அடையாளம் காட்டும்.
“பன்னாடை” என்னும் ஒரு சொல் வழக்கு உண்டு, அதை பெரும்பாலும் நாம் திட்டுவதற்கு பயன்படுத்துகிறோம். அதன் பொருள் “வடிகட்டி” என்பதாகும். பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது அதில் உள்ள கசடுகளை நீக்க பயன்படும் வடிகட்டியின் பெயர் தான் பன்னாடை. அதன் பணி என்ன? அருமையான பதநீரை விட்டு விட்டு அழுக்கினை பிடித்து வைத்துக் கொள்ளும். அதுபோல, எது ஆகாததோ அதை பிடித்துக்கொண்டு நாமும் பல சமயங்களில் பன்னாடையாக இருக்கிறோம்.
ஒரு நீதி கதை உண்டு, ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?” அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”. “சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான். இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?” என்றான். அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்?”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா?.
இக்கதையின் நீதி என்ன? அதை உணர முடிந்தவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அய்யகோ, சுனாமி வந்து எல்லோரும் சாகிறார்கள், நிலநடுக்கத்தால் பலபேர் மடிகின்றனர். இந்த கடவுள் எங்கே? இருந்தால் இப்படி நடக்குமா? அதற்கு பதில் “எல்லாம் நன்மைக்கே”. நாத்திகரின் பாணியில் சொன்னால் “Ecological Balance” என ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகளின் உரத்த குரலுக்கு அடங்கி போவது எதனால் என்றால், தனி மனித தாக்குதல் மூலம் மனதை காயப்படுத்துவதால். உதாரணத்துக்கு, என்னிடம் நிறைய பேர் கிண்டலடிப்பார்கள், ‘பரிசுத்த ஆவி என்கிறாயே? அதில் இட்லி வேகுமா’ என்று. எனக்கு சுரீரெனக் கோபம் வரும். எனது தாயைப் பழித்தது போல் இருக்கும். ஆனால் இப்பொழுது பண்பட்டு விட்டேன். ஒருவரின் மத நம்பிக்கையில் விளையாடுவதும், புண்படுத்துவதும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை இடிப்பதற்கு சமமல்லவா?
இப்பொழுதும் சில நாத்திக நண்பர்களிடம் விவாதம் செய்வேன், அவர்கள் அனைவரின் கேள்வியும் கடவுள் இருக்கிறார் என்று கண்ணால் கண்டால் தான் நம்புவோம். இதே கேள்வியை நரேந்திரன் கேட்டான் விவேகானந்தர் ஆனார். அதே போல் நீங்களும் உங்களுக்குள்ளே கேளுங்கள் மனம் பக்குவப்படும். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல எங்கெங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கு முடிச்சு போட்டு இறைவனை பழிக்காதீர்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள், செய்யும் தொழிலே தெய்வம், அதனால் செய்யும் தொழிலை நேசியுங்கள். இவைகள் எல்லாம் நாத்திகரும் ஆத்திகத்தை தேடும் வழிகள். இறைவனை தேடுங்கள் பண்படுங்கள்.
உங்கள் கருத்துக்களும் விமர்சங்களையும் வரவேற்கிறேன்
என்றும் அன்புடன்
வில்சன்
Labels:
சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
arumai wilson. sariyaana pagirvu,. expectin vaalpayyan
// மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல எங்கெங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கு முடிச்சு போட்டு இறைவனை பழிக்காதீர்கள். ///
அழகாக சொன்னீர்கள் ..
அப்படியே கடவுளை காட்டு என்று கேட்டாலும் அப்படி கடவுளை
அவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. முடிந்தால் உணர்ந்து கொள்ளுங்கள் .. நாங்கள் சொல்லவதெல்லாம் மத உணவர்வுகளை நாத்திகம் என்ற பெயரில் கேவலப்படுத்தாதீர்..
நன்றி LK மற்றும் செல்வக்குமார். இந்த பதிவின் கருவை செல்வக்குமாரின் பின்னூட்டத்தில் இருந்ததுதான் எடுத்தேன் (http://maruthupaandi.blogspot.com/2010/07/13072010_13.html)
கண்ணால் கண்டால் தான் நம்புவோம்// என்னை பொறுத்த வரை காற்றை உணர்வது போல் கடவுள் இருப்பதை உணர்ந்தால் நான் கடவுள் இருப்பதை ஒத்துக்குவேன்
:)
@சௌந்தர்@
நமது உடம்பில் ரத்தம் சூடாக இருக்கும் வரை அப்படி தான் இருக்கும். ஆடி அடங்கி நாடி தளரும் போது சிலருக்கு உணரும்.
good post :)
நண்பா
நீங்கள் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள் முதலில் உங்கள் கருத்தை மதிக்கிறேன்
கடவுள் உங்களுக்கு ஒரு நம்பிக்கை,அதில் தவறேதும் இல்லை
உண்டு என்ற ஒரு வார்த்தை இருக்குமானால்,இல்லை என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,இல்லாவிடில் இரண்டுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்
இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
கடவுளை பற்றிய என் புரிதல்களை இங்கு பதிவிட்டிருக்கிறேன்,பாருங்கள்
http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_07.html
//அதுதான் உண்மை! கடவுள் இருக்கிறார்!!. குரங்கிலிருந்து மனிதன் வந்தான், பிரபஞ்சத்தில் நடைபெற்ற அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாகின என்பதெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.//
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதும், அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாயின என்பதும் நிருபிக்க படவில்லை.இவை அனைத்தும் நிருப்பிக்க படாத கொள்கை அளவிலேயே உள்ளன!!
அஹம் பிரம்மாஸ்மி !
தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் சமம், ஆனால் மதத்திற்கு மதம் அது மாறுபடும் போது, ஒழுக்கமே கேள்வி குறியாகிறது!
மதம் தான் மனிதனை செமை படுத்துகிறது என்ற கூற்று ஏற்க்ககூடியதல்ல! அதையும் தாண்டிய அறிவை பெற்று விட்டோம், நமக்கு சமூக அக்கறை இருக்கிறது!, நம்மால் மற்றவர் துன்பம் அடையக்கூடாது என நினைக்கிறோம், அதுவே போதும்! கடவுளை தூக்கி குப்பையில் போடுங்கள்!
அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ?????
// குரங்கிலிருந்து மனிதன் வந்தான், பிரபஞ்சத்தில் நடைபெற்ற அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாகின என்பதெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. // மன்னிக்கணும், இதுவரைக்கும் யாரும் இவற்றை நிரூபிக்கவில்லை, அப்படி எதிர்காலத்தில் நடந்தால் அவர்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும். [அது நடக்காது என்பது வேறு விஷயம்].
//விஞ்ஞான வளர்ச்சியால் நிலவில் கால் வைத்தவன் கூட முதலில் கடவுளுக்கு நன்றி சொன்னேன் என்கிறான்.// திரும்பவும் மன்னிக்கணும், இதுவரைக்கும் யாரும் நிலாவுல கால் வைக்கல, வச்சா மாதிரி காமிச்சது சினிமாப் படம். பூமியின் ஈர்ப்பு மண்டலத்தைத் தாண்டினாலே நீ உயிரோடு தப்ப முடியாது, அங்குள்ள அண்டவெளிக் கதிர் வீச்சுகளும், சூரியனின் கதிர் வீச்சுகளும் மனிதனை அவித்த முட்டை போல ஆக்கி விடும். அமெரிக்கா காரன் உலகத்தை ஏமாற்ற பண்ணிய பித்தலாட்டம் தான் நிலவுப் பயணம், 1965 களில் டஜன் முறை போன மனிதன் ஏன் அதுக்கப்புறம் அறுபது வருஷமா அதுபத்தி மூச்சே விடாம இருக்கிறான்? ரஷ்யா காரன் ஏன் மனிதனை அனுப்பவில்லை? [இத்தனைக்கும் அவர்கள் அமெரிக்கர்களை விட முன்னேறியவர்கள்]. இப்போ சந்திராயன் அனுப்பி படமெல்லாம் எடுத்தாங்களே, அதுல , "இதுதான் அமெரிக்காகாரன் ஒட்டியர் கார்", போய் இறங்கிய மடியூல், நட்டு வச்ச கொடின்னு ஒரு படம் கூட இல்லியா, ஏன்? ஏன்னா அவனுங்க போயிருந்தாதானே இருக்கும்!
@ ஜெயதேவா!
பரிணாமம் மரபணுக்களின் மூலம் நிருபிக்கபட்டு விட்டன!, அணு மோதல் முயற்சி பிக்பேங்கின் தத்துவ ஆராய்ச்சி! அதை தான் பூமிக்கு அடியில் செய்து கொண்டிருக்கிறார்கள்!
சந்திரனுக்கு செல்லவில்லை என்பது தான் மதவாதிகளின் பல ஆண்டு கூச்சல், அதையே தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்!, சந்திரன் என்ன உங்க வீட்டு ப்ளேகிரவுண்டா சந்ரயானில் எல்லாம் தெரிய!
//தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் சமம், ஆனால் மதத்திற்கு மதம் அது மாறுபடும் போது, ஒழுக்கமே கேள்வி குறியாகிறது!//
மதத்திற்கு மதம் மாறுபட்டாலும் ஒரு ஒழுக்க முறை இருக்கத்தான் செய்கிறது, அதனை தூக்கி எறிந்துவிட்டு எதனடிப்படையில் வாழ்விர்கள்.
//நம்மால் மற்றவர் துன்பம் அடையக்கூடாது என நினைக்கிறோம், //
நல்ல எண்ணம், ஆனால் மற்றவர்கள் அப்படி செய்வார்கள் என எப்படி உங்களால் கூறமுடியும்.
//கடவுளை தூக்கி குப்பையில் போடுங்கள்!//
கடவுளை வணங்குபவன் கூட இத்தனை முறை கடவுளை துதி பாட மாட்டான், உங்கள் இயக்க வாதிகளே அதிகம் கடவுள் நாமம் பாடுகிரிர்கள்.
www.carbonfriend.blogspot.com
//கடவுளை வணங்குபவன் கூட இத்தனை முறை கடவுளை துதி பாட மாட்டான், உங்கள் இயக்க வாதிகளே அதிகம் கடவுள் நாமம் பாடுகிரிர்கள்.//
எதியிடம் ஜாக்கிரதையாக இருக்க, அவனை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறோம் இல்லையா அதுபோல்!
மனிதன் என்ற அடையாளமுல்ல மனிதனால் சக மனிதனுக்கு எந்த ஆபத்துமில்லை!
நான் இந்த மதம், இன்ன சாதி என்ற மனிதன் தொலைத்த மிருகத்தால் மட்டுமே சக மனிதனுக்கு ஆபத்து!
ஆண்டாண்டு காலமாக சொல்லி கொடுத்து வளர்த்த கடவுளை சட்டென்று தூக்கி போட முடியாது தான், ஆனால் ஏன் கடவுள் என்று யோசிக்கலாமே!
நண்பர் வால்பையன்,
//பரிணாமம் மரபணுக்களின் மூலம் நிருபிக்கபட்டு விட்டன!,//
எந்த மரபணுக்களின் மூலமும் நிருபிக்கப்படவில்லை,
//அணு மோதல் முயற்சி பிக்பேங்கின் தத்துவ ஆராய்ச்சி! அதை தான் பூமிக்கு அடியில் செய்து கொண்டிருக்கிறார்கள்!//
பெருவெடிப்பு ஆராய்ச்சி நடப்பது உண்மைதான், அவைகள் நிரூபிக்கவும் பட்டுவிட்டன, ஆனால் அதற்கும் உங்கள் பரிணாம கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை.
//சந்திரனுக்கு செல்லவில்லை என்பது தான் மதவாதிகளின் பல ஆண்டு கூச்சல்,//
சந்திரனுக்கு இனிவரும் காலங்களில் போகமுடியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இதுவரை போகவில்லை, 1969லேயே மனிதன் சந்திரமண்டலம் போனான் என்றால் இதுவரை அவனால் ஏன் போகமுடியவில்லை, நண்பர் ஜெயதேவா கருத்து சரியே, அமெரிக்காவின் கவுரவத்தை காத்துக்கொள்ள எடுத்த நாடகமே அந்த சந்திரமண்டல படம். youtube தளத்தில் தேடினால் அதற்கான சரியான ஆதாரம் கிடைக்கும்.
www.carbonfriend.blogspot.com
//நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என நினைப்பவன், நேரிய பாதையில் செல்வான். ஒரு பயம் இருக்கும், நம்மை ஒரு சக்தி காக்கின்றது அது நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணி தவறு செய்ய மாட்டான்.//
அப்படியானால், மனிதன் தவறு செய்யாமல் இருக்க உருவாக்கப்பட்டதுதான் கடவுள் அல்லவா?
//பரிணாமம் மரபணுக்களின் மூலம் நிருபிக்கபட்டு விட்டன!,//
எந்த மரபணுக்களின் மூலமும் நிருபிக்கப்படவில்லை,//
சிம்பன்சிகளின் ஜீன்களுக்கும், நமக்கும் இருக்கும் ஒற்றுமையின் அடிப்படையில்!
//பெருவெடிப்பு ஆராய்ச்சி நடப்பது உண்மைதான், அவைகள் நிரூபிக்கவும் பட்டுவிட்டன, ஆனால் அதற்கும் உங்கள் பரிணாம கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை.//
உண்டு தோழர்!
எலெக்ட்ரான், புரோட்டன் எண்ணிக்கையோ ஒரு தனிமத்தை நிர்ணயிக்கிறது!, ஹைட்ரஜனும் , ஆக்ஜிசனும் உருவானால் தான் நீர் உருவாகும், நீர் தான் உயிரின் மூல ஆதாரம்! வந்துவிட்டதா பரிணாமம்!
//சந்திரனுக்கு இனிவரும் காலங்களில் போகமுடியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இதுவரை போகவில்லை, 1969லேயே மனிதன் சந்திரமண்டலம் போனான் என்றால் இதுவரை அவனால் ஏன் போகமுடியவில்லை, நண்பர் ஜெயதேவா கருத்து சரியே, அமெரிக்காவின் கவுரவத்தை காத்துக்கொள்ள எடுத்த நாடகமே அந்த சந்திரமண்டல படம். youtube தளத்தில் தேடினால் அதற்கான சரியான ஆதாரம் கிடைக்கும்.//
கோடிகணக்கில் செலவு செய்து பலநாட்டு ஆராய்ச்சியாளர்களுன் நடக்கும் நாசா ஒரு டுபாக்கூர் என்கிறீர்களா!?, இன்னும் வெளிவராத படங்களுக்கு கூட தான் யூடியூப்பில் விடியோ இருக்கு, அதையும் நம்புவீர்களா!?
நாம் அனுப்பிய செயற்கை கோள் 2004 லிலேயே சூரிய மண்டலத்தை தாண்டி விட்டது, இங்கே இருக்கும் சந்திரன் ஜுஜுபியாகி ரொம்ப நாளாச்சு!
//சிம்பன்சிகளின் ஜீன்களுக்கும், நமக்கும் இருக்கும் ஒற்றுமையின் அடிப்படையில்!//
சிம்பன்சீக்கும் மனிதனுக்கும் மட்டும் ஒற்றுமை இல்லை, அனைத்து விலங்குகளுக்கும் நமக்கும் தான் ஒற்றுமை இருக்கு, அனைத்தும் உயிரினங்கள் என்றே வரும்போது, இதில் ஒற்றுமை இருபத்தில் என்ன ஆச்சர்யம்.
//எலெக்ட்ரான், புரோட்டன் எண்ணிக்கையோ ஒரு தனிமத்தை நிர்ணயிக்கிறது!, ஹைட்ரஜனும் , ஆக்ஜிசனும் உருவானால் தான் நீர் உருவாகும்,//
பெருவேடிகொள்கையல் நீர்த்துளி உருவானதா, அதைகூருங்கள் முதலில், அப்படி உருவானால் கூட, ஒரு உயிரின் உருவாக்கத்திற்கு நீர்த்துளி ஆதாரம் இல்லை, அவை உயிர் வளர்வதர்கே,
//கோடிகணக்கில் செலவு செய்து பலநாட்டு ஆராய்ச்சியாளர்களுன் நடக்கும் நாசா ஒரு டுபாக்கூர் என்கிறீர்களா!?//
யாரையும் டுபாக்கூர் என்று சொல்லவில்லை, ஒரு பக்கம் உண்மையான ஆராய்ச்சி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது, அதற்காக அவர்கள் கூறும் அனைத்தும் உண்மை என்று ஆகாது, 40 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு நாடும் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியவில்லையே ஏன், ஏன் அனுப்பியதாக சொன்ன அமெரிக்க கூட அனுப்பவில்லை,
//நாம் அனுப்பிய செயற்கை கோள் 2004 லிலேயே சூரிய மண்டலத்தை தாண்டி விட்டது, //
செல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும், ஆனால் மனிதனை ஏற்றி செல்லவில்லை என்பதே உண்மை.
பரிணாமம் தோற்றம்: http://www.carbonfriend.blogspot.com
//சிம்பன்சீக்கும் மனிதனுக்கும் மட்டும் ஒற்றுமை இல்லை, அனைத்து விலங்குகளுக்கும் நமக்கும் தான் ஒற்றுமை இருக்கு, அனைத்தும் உயிரினங்கள் என்றே வரும்போது, இதில் ஒற்றுமை இருபத்தில் என்ன ஆச்சர்யம்.//
விலங்கு செல் ஒன்று தான்! அதிலுள்ள டி.என்.ஏ ஒற்றுமை பற்றீ பேசி கொண்டிருக்கிறேன்!, நமக்கும் சிம்பன்சிக்கும் 98% ஒற்றுமை இருக்கு!
//பெருவேடிகொள்கையல் நீர்த்துளி உருவானதா, அதைகூருங்கள் முதலில், அப்படி உருவானால் கூட, ஒரு உயிரின் உருவாக்கத்திற்கு நீர்த்துளி ஆதாரம் இல்லை, அவை உயிர் வளர்வதர்கே,//
நேர்மின், எதிர்மின் அயனிகள் தன்னிச்சையாக பெருக்கி கொள்ள வசதியில்லை, அதாவது ஒரு கிராம் தங்கம், ஒரு வருடம் ஆனாலும் அப்படியே இருக்கும், ஆனால் உயிரினம் வளரும்!, ஆராய்ச்சியின் நோக்கம், உட்கரு உண்டானது எப்படி என கண்டுபிடிக்க!
//யாரையும் டுபாக்கூர் என்று சொல்லவில்லை, ஒரு பக்கம் உண்மையான ஆராய்ச்சி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது, அதற்காக அவர்கள் கூறும் அனைத்தும் உண்மை என்று ஆகாது, 40 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு நாடும் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியவில்லையே ஏன், ஏன் அனுப்பியதாக சொன்ன அமெரிக்க கூட அனுப்பவில்லை,//
தேவையான அளவு போய் வந்தாயிற்று, இன்று மனிதன் இல்லாமல் அனைத்தையும் சாதிக்க கண்டுபிடிப்புகளும் வந்தாயிற்று!, இன்னும் ஏன் என்று தான் அனுப்பவில்லை! சர்வதேச விண்வெளி ஓடம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது, அதில் எரிபொருள் நிரப்பபட்டு இன்னும் தொலைவில் ஆராய வசதி ஏற்பாடு செய்யபட்டு வருகிறது, அங்கே சென்று திரும்பும் பொழுது தான் கொலம்பியா விண்கலம் வெடித்து கல்பனாசாவ்லா இறந்தார்!
//செல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும், ஆனால் மனிதனை ஏற்றி செல்லவில்லை என்பதே உண்மை. //
பரிணாமம் எப்படி பல ஆயிரம் ஆண்டுகள் பிடித்ததோ அதே போல் சில ஆராய்ச்சிகளுக்கும் நாட்கள் பிடிக்கும்!
//பரிணாமம் தோற்றம்: http://www.carbonfriend.blogspot.com//
சரியான சுட்டி கொடுங்கள் தோழர்!
@ஜில்தண்ணி - யோகேஷ்
தங்கள் வருகைக்கு நன்றி.
உண்டு மற்றும் இல்லை என்பவை இரண்டும் இரு கண்கள் மாதிரி தான். ஆனால் ஒரு சில தனிமனித தவறுக்காக இறையாண்மையை இல்லை என்று சொல்லமுடியாது என்பது என் பணிவான கருத்து. அதாவது மூட்டை பூச்சிக்குப் பயந்து ஏன் வீட்டை கொளுத்துகிறீர்கள்?
@கார்பன் கூட்டாளி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்கள் புதியதாக இருக்கின்றன. அதைப் பற்றி தகவல்கள் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் பதிலுரைக்கிறேன்.
@வால்பையன்
//நான் இந்த மதம், இன்ன சாதி என்ற மனிதன் தொலைத்த மிருகத்தால் மட்டுமே சக மனிதனுக்கு ஆபத்து!//
மிக சரியாகச் சொன்னீர்கள். எனது இந்த பதிவின் சாராம்சமே இந்த வரிகள் தான். இந்த மிருகங்களை காரணம் காட்டி மத நம்பிக்கையை சிதைப்பதுதான் வருத்தமாக இருக்கிறது நண்பரே.
@கும்மி
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே, தனிமனித ஒழுக்கம் என்பது இறை மீது இருக்கும் மரியாதை இன்னும் பச்சையாக சொல்லப் போனால் பயம் என்றே சொல்லுவேன். தவறுகளுக்கு தண்டனை இருப்பதாக நினைப்பததால் தான் மனிதம் சற்றேனும் நிலைக்கிறது.
விமல், மோனி, ஜெயதேவா
தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
//விலங்கு செல் ஒன்று தான்! அதிலுள்ள டி.என்.ஏ ஒற்றுமை பற்றீ பேசி கொண்டிருக்கிறேன்!, நமக்கும் சிம்பன்சிக்கும் 98% ஒற்றுமை இருக்கு!//
ஒற்றுமை இருக்கு 98% அல்ல 96%, DNA ஆராய்ச்சி செய்யாமல் நேரிலேயே பார்த்து மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் உள்ள 95% ஒற்றுமையை சொல்லலாம்,அதே போல மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் கூட DNA வில் பல ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.இன்னும் சொல்லப்போனால், குரங்கை விட மனிதனுக்கு இரண்டு குரோமோசோம்கள் குறைவு தான், ஆனால் மனிதன் மட்டும் ஆறறிவு உள்ளவனாக இருப்பது எப்படி??
//நேர்மின், எதிர்மின் அயனிகள் தன்னிச்சையாக பெருக்கி கொள்ள வசதியில்லை, அதாவது ஒரு கிராம் தங்கம், ஒரு வருடம் ஆனாலும் அப்படியே இருக்கும், ஆனால் உயிரினம் வளரும்!, ஆராய்ச்சியின் நோக்கம், உட்கரு உண்டானது எப்படி என கண்டுபிடிக்க!//
சரிதான், ஆனால் இதில் உயிரினத்தின் தோற்றம் இல்லை,
//சரியான சுட்டி கொடுங்கள் தோழர்! //
அது என்னுடைய சுட்டி, சரியானது வேணும் என்றால், வால்பையன் சுட்டி ஓகே வ?
//குரங்கை விட மனிதனுக்கு இரண்டு குரோமோசோம்கள் குறைவு தான், ஆனால் மனிதன் மட்டும் ஆறறிவு உள்ளவனாக இருப்பது எப்படி??//
யானைக்கு நம்மை விட மூளை பெரிதாக இருப்பதால் அது பல மொழிகள் பேச முடியாது தோழர்!, பயன்படுத்துவதில் இருக்கு அது! குரோம்சோம்கள், பிரதி நகலை அப்படியே எடுக்க உதவுமே தவிர அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை!
உட்கரு தோற்றம் பற்றி கேட்டிருந்தீர்கள்! நியூர்\ட்ரான் எனும் உட்கரு தன்னை தானே பிரிதி எடுக்க இயாலதது, அது நியுக்கிளிஸாக மாறியதே உயிரின தோற்றத்தின் ஆரம்பம்!, அந்த தற்செயல் நிகழ்வை தான் பலர் கடவுள் என்கிறார்கள்!
//அது என்னுடைய சுட்டி, சரியானது வேணும் என்றால், வால்பையன் சுட்டி ஓகே வ? //
உங்களுடய தளத்தில் அதை பற்றீ எழுதியிருக்கிறீர்களோ என்று நினைத்தேன்!
நண்பர் வால்பையன்,
//குரோம்சோம்கள், பிரதி நகலை அப்படியே எடுக்க உதவுமே தவிர அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை//
நீங்கள் கூறுவது தவறு,குரோமோசோம் என்பதுதான் மரபு, இன்னும் விள்ளகமாக சொல்லவேண்டுமெனில், மரபு(Gene) என்பது மரபியல் செய்தியால் உள்ளடிக்கியது,இப்படி லட்சகணக்கான மரபுகளை உள்ளடிக்கியதே DNA, இப்படி, டிறில்லிலியனுக்கு அதிகமான DNA களை கொண்டது தன ஒரு குரோமோசோம், இந்த குரோமோசோம் மனிதனுக்கு 46, apes களுக்கு 48, ஆக இந்த குரோமோசொம்கள் மனிதனின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள அணைத்து விசயத்தையும் உள்ளடக்கியது அறிவு உட்பட,
//உங்களுடய தளத்தில் அதை பற்றீ எழுதியிருக்கிறீர்களோ என்று நினைத்தேன்! //
என்னுடைய தலத்தில் தற்போது தன துவங்கி இருக்கிறேன்.
அறிவுக்கும் குரோம்சோம்க்கும் தொடர்பிருப்பதாக உறுதியாக நம்புகிறீர்களா!?
உங்கள் கணிப்பில் வாத்தியார் பையன் நிச்சயம் மக்காக இருக்க வாய்ப்பில்லை தானே!?
உங்கள் கணிப்பில் வாத்தியார் பையன் நிச்சயம் மக்காக இருக்க வாய்ப்பில்லை தானே!?
வாத்தியார் என்பதால் அவருடைய அறிவு அவருடைய மகனுக்கு வருவது இல்லை, ஆனால் அதற்காக அவன் ஐந்து அறிவோட பிறப்பான் என்று அர்த்தம் இல்லை, மரபணுவில் தொடரக்கொடிய பகுத்தறிவு தொடர்ந்து வரும், உலக விசயத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மரபணுவில் சேர்ந்து சந்ததிக்கும் தொடர்ந்து வரும் என்பது தவறு.
அதை தான் சொல்கிறேன் மரபணுவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று!,
நான் என் பெற்றோரை போல் இருப்பது தோற்றம், ஜீன்கள் அது தான் எழுதியிருக்கும்!
எதுவெல்லாம் மரபணுவில் மாற்றத்தை உருவாகும் என்று என்னுடைய தளத்தில் உள்ள பதிவில் எழுதி உள்ளேன், படித்தால் உங்களுக்கு புரியும்.
நிச்சயம் படிக்கிறேன்!
//மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மலிய விடக் கூடாது. அந்த “மதம்” நமது மனத்தில் இருக்க வேண்டுமேயொழிய மண்டைக்குள் ஏறக் கூடாது. மதம் யானைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தலைக்கேறினால் விளைவுகள் விபரீதமாகும்.// yes nicely written.
நல்ல அலசல் கட்டுரை.ஆனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நிருபிக்க படவில்லை.இத நம்பினால் கூட நாம் நாத்திகர்களாகி விடுவோம்
மிக மிக அருமையான பதிவு வில்சன்.
வாழ்த்துக்கள்.
மனோ
Thanks for sharing post – much appreciated and now following you! Looking forward to your Post....
Post a Comment