என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Monday, August 9, 2010

கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-5)

(சிதிலமடைந்த ராஸ் தீவின் ஒரு குடியிருப்பு)
இதுவரை
பாகம்-4                                                                    

எங்கள் உடைமைகளை எல்லாம் காப்பறையில் வைத்து பூட்டி விட்டு அவரவர் இருக்கைக்கு சென்றோம் அது இரயில் வண்டியில் இருப்பது போல மூன்றடுக்கு படுக்கை, ஒரு பெரிய ஹாலில் சுமார் 150 பேர் தங்கும் அளவுக்கு நெருக்கமாக அமைக்கப் பட்டு இருந்தது. கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளின் அவலங்கள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். விரிவான விளக்கத்திற்கு இந்த வலைத்தளத்தை காணவும் (http://www.travelblog.org/Asia/India/Andaman-and-Nicobar-Islands/Port-Blair/blog-481773.html).  
இருப்பினும் நாங்கள் எங்கள் கப்பல் பயணத்தை மிகவும் ரசித்து அனுபவித்தோம். கரை மறைந்து ஆழக்கடலில் செல்லும் போது நீலக்கடலின் அமைதியும் எப்போதாவது தொலைவில் கடந்து செல்லும் மற்ற கப்பல்களை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் விவரிக்க இயலாதவை. எங்களுடன் இதே பயிற்சிக்காக பிற பல்கலையிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர்.
மொத்தம் பத்து பேர் இவ்வாறு கப்பலில் இருந்தோம்.கப்பல் பயணத்தின் போது ஒவ்வாமையால் அவ்வப்போது ஏற்படும் வாந்தியும், ஒருவருக்கொருவர் அறியாமல் சென்று வாந்தி எடுத்து விட்டு அடுத்தவரின் ஒவ்வாமையை கிண்டல் செய்வதுமாய் மகிழ்ச்சியாக நாட்கள் கழிந்தன. இரண்டு இரவுகள் கப்பலில் கழிந்து மூன்றாம் நாளில் அந்தமானை நெருங்கினோம்.
அந்தமானின் தலைநகரான நிக்கோபர் சென்று அடையும் முன் கார்நிக்கோபர் தீவுக்கு சென்று அதன் பயணிகளை இறக்க வேண்டும். அந்த இடத்தில் பவளப்பாறைகள் அதிகம் என்பதால் 10° சானல் எனும் ஒரு குறுகிய கால்வாய் வழியே பயணிக்க வேண்டும். கைதேர்ந்த மாலுமிக்கே அது சவாலான விஷயமாம் அதுவும் குறிப்பாக புயல் காலங்களில் சொல்லவே வேண்டாம்.
சரியாக கப்பல் அந்த இடத்தை அடையும் முன் புயல் அறிவிப்பு வெளியிடப் பட்டது. கப்பலால் நிர்ணயித்த திசையில் பயணிக்க இயலவில்லை. மாலுமியும் கப்பலை அந்த வழியில் இயக்குவது இயலாது என அறிவித்து கடலின் ஆழமான பகுதிகளில் சுற்ற துவங்கினார். சும்மாவே வாந்தி மயக்கத்தில் இருந்த பயணிகளுக்கு பேதியும் இலவச இணைப்பாய் இணைந்து கொண்டது. பொது கழிவறை "நிறைந்து வழிந்தது". ஊழியர்கள் அதை சுத்தம் செய்வதும், பயணிகள் பாதையெங்கும் நாறடிப்பதும், வாடிக்கையான வேடிக்கைகள்.
ஒரு வழியாக புயல் அமைதியானது. இவ்வளவு சீக்கிரம் அது நிலைக்கு வந்தது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம். கார்நிக்கோபர் சென்று பின் நிக்கோபர் துறைமுகத்தை அடைந்ததும் வழக்கம் போல கஸ்டம்ஸ் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து வெளியேறினோம். மூன்று நாட்கள் தண்ணீரின் தாலாட்டில் இருந்ததால் எங்கள் கால்கள் இன்னும் தள்ளாடுவதை உணர முடிந்தது.
அந்தமானில் வனப் பகுதிகளும் அதில் ஆதிவாசிகளும் அதிகம் என்பதால் அவை முழுவதும் வனத்துறையினரின் கட்டுபாட்டில் இருக்கும். எங்களுக்கு இந்த பயிற்சியை ஒருங்கிணைப்பு செய்து நடத்தியது வனத்துறையினர் என்பதால் எங்கு சென்றாலும் ராஜபோக உபச்சாரம் தான். அதை கப்பலில் இருந்து இறங்கியதுமே உணர்ந்தோம், எங்கள் வலிகள் எல்லாம் அதை கண்டு பறந்தன.
புதிதாக கட்டப்பட்ட ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதன்முதலில் அதில் நாங்கள் தான் தங்கினோமாம். குளிரூட்டப்பட்ட புத்தம் புதிய அறைகள், ஸ்பிரிங் மெத்தைகள், பளபளக்கும் மார்பிள்கள் பதித்த பாத்ரூம் என எங்கு பார்த்தாலும் பணத்தை இறைத்து கட்டப் பட்டு இருந்தது. எங்கள் கப்பல் பயணத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்ததும் எங்களையும் அறியாமல் சிரிப்பு வந்தது. எங்களை சற்று இளைப்பாற சொல்லி, மாலை சிற்றுண்டி முடித்ததும் ஊரை சுற்றிக் காட்டினார்கள்.
எங்கு பார்த்தாலும் தமிழர்கள், குறிப்பாக இராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகாரர்கள். இந்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் வணிகத்தில் தமிழர்களின் ஆதிக்கமே அதிகம். நம்ம ஊர் தேநீரையும் மசால் வடையையும் மிகவும் ரசித்து அருந்தினோம். நம்மை அடையாளங்கண்டு "எந்த ஊர் தம்பி? அட நம்ம பக்கத்து ஊரு!" என உரிமை பாராட்டிய கடைக்காரர்களையும், டாக்சிக்கு ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிய ஓட்டுனர்களையும், போக்குவரத்து காவலர் இல்லாத இடத்திலும் சிக்னலை மதித்து செல்லும் வாகன ஓட்டிகளையும் பார்த்து வியந்தோம். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா? என அடிக்கடி கிள்ளி பார்க்கத் தோன்றியது.
கோவா போல இதுவும் மலையும் கடலும் கைகுலுக்கும் ஓர் ரம்மியமான உலகம். எங்கு நோக்கினும் பச்சை பசேல் என தென்னை மரங்கள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகள் என கண்ணுக்கு விருந்துகள் ஆங்காங்கே. சிறிதும் பெரிதுமாக எத்தணை தீவுகள் என சரியாக தெரியவில்லை, அவ்வளவு தீவுகளின் கூட்டம் தான் அந்தமான்.
இவற்றில் மனிதர்கள் வசிக்கும் தீவுகள் சொற்பமே. பல தீவுகளில் இன்னும் மனிதர்களை வேட்டையாடும் கொடூர காட்டுவாசிகள் வசிக்கிறார்களாம். ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப் பட்ட இந்த தீவுகளில் இருந்து இந்த காட்டுவாசிகளை சுதந்திரப் போராட்டக் கைதிகளைக் கொண்டு போரிட்டு விரட்டியடித்து முக்கிய இடங்களை கையகப் படுத்தி உள்ளனர்.
நமது தியாகிகளுக்காக கட்டப்பட்ட செல்லுலார் சிறைச்சாலையை சென்று பார்த்தோம். அங்கே அவர்கள் பட்ட கொடுமைகளை ஒலி ஒளி காட்சியாக காட்டுகிறார்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
நிக்கோபாருக்கு முன்பு ராஸ் எனும் தீவு தான் தலைநகரமாக இருந்திருக்கிறது. பின்பு அந்த தீவு கடலில் மூழ்க துவங்குவதாக சொல்லி நிக்கோபாருக்கு மாற்றி இருக்கிறார்கள். அந்த சிதிலமடைந்த தீவினைப் பார்க்க சிறியதொரு கப்பலில் சென்றோம். அங்கே ஆங்கிலேயர் பயன்படுத்திய பேக்கரி, நீச்சல் குளம், தேவாலயம் மற்றும் குடியிருப்புகள் என அனைத்தும் பாழடைந்து இருந்தாலும் உள்ளது உள்ளபடியே பராமரித்து வருகிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.
அவ்வளவு அழகான அந்தமானில் எங்கு சென்றாலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நேர்த்தியான “இயற்கையை” இயற்கை மாறாமல் பராமரிக்கின்றனர். 
இவ்வளவு அழகு இருந்தால் கண்டிப்பாக ஆபத்தும் இருக்கும் தானே????

14 comments:

Anonymous said...

உங்க எழுத்து நடை மிக நேர்த்தியா இருக்கு வில்சன்..
ரசிச்சு படிச்சேன் நண்பா..
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..

School of Energy Sciences, MKU said...

மிக்க நன்றி பாலாஜி சரவணன்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரசிக்கும் படியான எழுத்து நடை...

மிகவும் அருமை..

சௌந்தர் said...

இவ்வளவு அழகு இருந்தால் கண்டிப்பாக ஆபத்தும் இருக்கும் தானே???//

உண்மைதான் இது வரை அமைதியாக செல்கிறது.....

செல்வா said...

/// முதன்முதலில் அதில் நாங்கள் தான் தங்கினோமாம். குளிரூட்டப்பட்ட புத்தம் புதிய அறைகள், ஸ்பிரிங் மெத்தைகள், பளபளக்கும் மார்பிள்கள் பதித்த பாத்ரூம் என எங்கு பார்த்தாலும் பணத்தை இறைத்து கட்டப் பட்டு இருந்தது. எ///
கப்பலில் பட்ட கஷ்டமெல்லாம் மறைந்து போகவச்சிட்டாங்க..!!
//இவ்வளவு அழகு இருந்தால் கண்டிப்பாக ஆபத்தும் இருக்கும் தானே????
///
ரொம்ப அழக சொல்லிருக்கீங்க ..!! தொடர்ந்து சொல்லுங்க .!!

ஜீவன்பென்னி said...

ஆஹா கடைசில டிவிஸ்டா... ரொம்ப நாள் காத்திருக்க வைக்குறீங்களே......

School of Energy Sciences, MKU said...

//வெறும்பய, செளந்தர், செல்வக்குமார், ஜீவன்பென்னி ....//
தங்கள் மேலான ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!!!

பனித்துளி சங்கர் said...

நண்பரே ஏற்றுக்கொள்ளும் கேள்வியுடன் பதிவை முடித்து இருக்கிறீர்கள் . அடுத்தப் பதிவு எப்பொழுது நண்பரே !?? ஒவ்வொரு பதிவும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது .தொடருங்கள் மீண்டும் வருவேன்

School of Energy Sciences, MKU said...

//பனித்துளி சங்கர்//
நன்றி நண்பரே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// வில்சன் said...

மிகவும் பயனுள்ள பகிர்வு. இன்றுதான் நானே இதை பற்றி அறிந்தேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சங்கர்//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

ஜில்தண்ணி said...

செமயா போயிட்டு இருக்கு

அந்தமானில் என்ன ஆபத்து,சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க :)

ஜெட்லி... said...

பயண அனுபவங்கள் படிக்க எனக்கு பிடிக்கும்...
நன்றாக போய் கொண்டிரிக்கிறது....தொடரட்டும்
உங்கள் பணி....

'பரிவை' சே.குமார் said...

நண்பரே...

உங்களை நான் கழுகின் வழியாக அறிந்தேன்.
நீங்கள் திருப்பத்தூரா... நான் தேவகோட்டை.
நானும் தற்போது அபுதாபியில் இருக்கிறேன். அழகப்பா பல்கலையில் எழுதிய கதை அருமையாகவும் எதார்த்தமாகவும் உள்ளது.
நட்பு தொடரும் நண்பரே...

நட்புடன்,
சே.குமார்
http://vayalaan.blogspot.com

Ahamed irshad said...

good Write-up...