என்னைப் பற்றி

- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Sunday, September 5, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-6)
வன் சதன் - எங்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்ட வளாகம்
இதுவரை
அந்தமானின் அடுத்த முகத்தை பார்க்கும் முன் எங்கள் பயிற்சிப் பட்டறைப் பற்றி சொல்லியாக வேண்டும். முற்றிலும் குளிரூட்டப் பட்ட அந்த சிறிய அரங்கம் அந்தமானின் அதிமுக்கிய அரசு உயரதிகாரிகளின் வரவேற்புரையுடன் முதல் நாள் வகுப்பு துவக்க விழாவுடன் இனிதே துவங்கியது. எங்களுக்கு பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து பவளப்பாறை வல்லுனர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் இந்திய வல்லுனர்களும் இணைந்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர்.
முதல் நாளன்று நண்பர்கள் அனைவரும் டிப்டாப்பாக ஆடை அணிந்து சென்றிருந்தோம். வந்திருந்த விஞ்ஞானிகள் அனைவரும் டிசர்ட்டும், பெர்முடாஸும் அணிந்து (இந்தியர் உட்பட) வந்திருந்தனர். எங்களுக்கு கிடைத்த முதல் அறிவுரையே "Be Casual" என்பது தான். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பயிற்சி பட்டறை என்றாலே யாராவது பிளேடு போட்டு எல்லாரையும் தூங்க வைத்து கொண்டு இருப்பார். காம்பிளிமெண்டாக கிடைக்கும் லெதர் பேக்கிற்காகவும், சர்டிபிகேட்டிற்காகவும் அதை சகித்து கொண்டு இருப்போம்.
ஆனால் இதுவரை நான் இப்படி ஒரு கலகலப்பான மற்றும் வினோதமான பயிற்சி வகுப்பை பார்த்ததே இல்லை. முதல் மூன்று நாட்கள் முழுதும் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் வகுப்புகள் நடந்தன.
ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படித்து கொண்டு இருக்கும் ஒரு இளம் மாணவி கீச்சுகுரலில் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் போது வாய் பிளந்து ரசித்தோம். (ஹ்ம்ம்ம்.. வெள்ளைக்காரி... வெள்ளைக்காரிதான் என்னா கலராயிருக்கா....!!!) அவள் தவிர மற்றொரு சீனப் பொம்பளையும்? வந்திருந்தாள். டியூப்லைட்டின் முன் குண்டு பல்பாய் அவள் வெளிச்சம் எடுபடவேயில்லை. டியூப்லைட்டா? என நீங்கள் முறைப்பது தெரிகிறது. அதற்கு காரணம் இருக்கிறது.
பயிற்சியின் இடையே எங்களுக்கு டைவிங் பயிற்சி இலவசமாக அளிக்கப் போவதாக இன்ப அதிர்ச்சி அளித்தனர். இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு குழு வருகிறது எனவும் அறிந்தோம். இவர்கள் ஆஸ்திரேலியாவின் பிரபல டைவிங் பயிற்றுனர்கள் என்றும் ஆஸ்திரேலிய கடற்படைக்கு டைவிங் பயிற்சி அளிப்பவர்கள் எனவும் எங்களுக்காக பிரத்யேகமாக வருகிறார்கள் எனவும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன், சும்மாவா? அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அந்தமானில் டைவிங் படிக்க பணம் வாங்கி வந்த எனக்கு இலவசமாக அதுவும் ஆஸ்திரேலியா நிபுணர்கள் அளித்தால் எப்படி இருக்கும்?
ஐஸ் பிரியாணிக்கு ஏங்கியவனுக்கு மட்டன் பிரியாணி கிடைத்தது போல இருந்தது. நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டைவிங் பயிற்சியாளர்கள் நான்காம் நாள் வருவார்கள் என அறிவிக்கப் பட்டது. நாங்கள் அனைவரும் இருப்புக் கொள்ளாமல் அன்று காலையில் அமர்ந்து இருந்தோம். மதியவேளையில் அந்த டீம் வந்து சேர்ந்தது. அதன் தலைவருக்கு (இன்ஸ்ட்ரக்டர்) ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். உதவி இன்ஸ்ட்ரக்டர் ஒரு பத்தொன்பது வயது அழகிய இளம்பெண். அவள் வந்ததும் சோடியம் விளக்காய் ஜொலிக்க ஆரம்பித்தாள். இப்போ புரியுதா? ட்யூப்லைட்டின் அர்த்தம்? சரி, சரி மேட்டருக்கு வருகிறேன்.
டைவிங் படிக்கப் படிப்பு தேவையில்லை ஆங்கில அறிவு மட்டும் கொஞ்சம் இருந்தால் போதும். மற்றபடி உடல் தகுதியும் நீச்சல் திறமையும் முக்கியம். எனவே, முதலில் நீச்சல் தேர்வு இருக்கும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி என கண்டிப்பாக சொல்லிவிட்டனர். ஓரளவு நம்பிக்கை இருந்தாலும், மனதிற்குள் ஒரு கிலி இருக்கத்தான் செய்தது. மறுநாள் அனைவரையும் கடலுக்கு கூட்டி சென்றனர். 3 கி.மீ. உள்ளே சென்றதும் படகை நிறுத்தி விட்டு இங்கிருந்து கரைக்கு எந்தவித உபகரணம் இல்லாமல் நீந்தி செல்லுங்கள் என்றனர். பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்பு முகக்கவச கண்ணாடி மற்றும் காலுக்கு துடுப்பு அணிந்து சென்றே பழகிப் போன எனக்கும் நண்பர் மாரிமுத்துவுக்கும் எதுவும் இல்லாமல் நீந்த வேண்டும் என்றதும் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.
எங்களுடன் களத்தில் இறங்கிய நிறைய வீரர்கள் பாதியிலேயே தோற்று படகில் ஏறினர். நானும், நண்பரும் தொட்டு விடும் தூரத்தில் கரை இருக்கும் நம்பிக்கையில் நீந்தினோம். அதுவோ தொடுவானம் போல் போய் கொண்டே இருந்தது. இருப்பினும் ஒரு வைராக்கியத்துடன் நீந்தி கரை சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். தம்பி முத்துராமன் ஏற்கனவே டைவிங் அந்தமானில் படித்து இருந்ததால் அவர் படகில் இருந்து எங்களுக்கு அளித்த ஊக்கம் மறக்க முடியாதது.
தேர்ச்சிப் பெற்ற அனைவரையும் இரண்டு குழுவாக பிரித்து டைவிங் டிரைனிங் கொடுக்க ஆரம்பித்தனர். முதல் நாள் கடலுக்கடியில் எப்படி பாதுகாப்பாக செல்வது என்பது பற்றியும், ஆழத்திற்கு ஏற்ப மாறும் அழுத்த மாறுபாடுகள் குறித்தும் வகுப்பு நடந்தது. மறுநாள் காலை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் கடல் நீர் நிரப்பி அதில் பயிற்சி அளித்தனர்.
அடுத்த நாள் காலை, முதன்முதலாக கடலில் டைவிங் என்றதும் ஆர்வமும் பதட்டமும் என்னை ஆட்கொண்டது. இதனிடையில் கப்பலில் வரும்போதே எனக்கு கடுமையான ஜலதோஷம் பிடித்து அவதிப்பட்டேன். அந்தமான் வந்தும் சரியாகவில்லை. டைவிங் பயிற்சியின் போது மூக்கடைப்பு இருந்தால் மிகவும் ஆபத்து என அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுத்த விண்ணப்பத்திலும் எனக்கு மூக்கடைப்பு மற்றும் சளியில்லை என உறுதியளித்து விட்டேன். எப்படியாவது டைவிங் கற்றுக் கொள்ள வேண்டும் ஆர்வமே மேலோங்கி இருந்தது.
முதல்நாள் டைவிங் எனது பிறந்தநாள் அன்று, அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கடலின் தரைக்கு சென்று அனைவரும் முழங்கால் இட்டு அமர்ந்து மீன்கள் கூட்டத்தை ரசித்தோம். முதலில் எங்களைக் கண்டு மிரண்டவைகள் சிறிது நேரம் கழித்து எங்களை கூட்டமாக சூழ்ந்து கொண்டன. எனக்கு என்னவோ அவை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போலவே தோன்றியது. இதுவரை டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்து ரசித்த வண்ண மீன்களின் அணிவகுப்பை நேரிடையாக அதுவும் பிறந்தநாள் அன்று கண்டு ரசித்தது எனது பாக்கியம் என்று தான் சொல்வேன்.
அவ்வப்போது மூக்கடைப்பினால் சிரமப்பட்டாலும் சமாளித்து கொண்டேன். டைவிங் முடிந்து கடற்பரப்பு வந்ததும் மூக்கை சிந்திய போது இரத்தம் வந்ததும் நண்பர்கள் மிகவும் பயந்து போனார்கள்.
அடுத்த பதிவில் நிறைவுறும் . . .
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பிறந்த நாள் அன்னைக்கு மீன்களின் வாழ்த்தா? மாப்ஸ் எல்லா பிறந்த நாளிலுமே...மீன்களின்கூட்டம்தான் .......கடலடியில் இன்னும் என்ன என்ன அதிசயங்களோ?
கீச்சுகுரலில் பேசுன அக்காதான் சொல்லிக் கொடுத்தாங்களா?
ரத்தமா மூக்குலயா?????
வாங்க வில்சன்,
ரொம்ப நாள் காக்க வச்சுடீங்க!
கோர்வையா ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க நண்பா!
//இதுவரை டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்து ரசித்த வண்ண மீன்களின் அணிவகுப்பை நேரிடையாக //
ம்.. கொடுத்து வச்சவுங்க நீங்க :)
//Deva//
அந்த கீச்சு குரல் அக்கா இல்லை. இது சோடியம் விளக்கு அக்கா சொல்லி தந்தது.
//Balaji Saravana //
மிக்க நன்றி நண்பரே!
ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படித்து கொண்டு இருக்கும் ஒரு இளம் மாணவி/////
வீட்டில் இதை படிக்க சொல்றேன்
எனக்கு என்னவோ அவை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போலவே தோன்றியது.///
கிருஷ்ணர் வந்து சொன்னார் சொல்லுங்கள்
போது இரத்தம் வந்ததும் நண்பர்கள் மிகவும் பயந்து போனார்கள்////
நாங்களும் தான்
அருமை அருமை ! என்ன ஒரு இனிமையான அனுபவம் அந்தமானில் !
அழகிய இளம் பெண்கள் ! வாழ்த்தும் மீன் கூட்டங்கள் !
ஹ்ம்ம் கிளப்புங்கள்
என்ன ஒரு இனிமையான அனுபவம்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News
Post a Comment