என்னைப் பற்றி
- வில்சன்
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Blog Archive
Powered by Blogger.

Tuesday, July 20, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-1)
வணக்கம் சகா!
பயணக்கட்டுரைகள் எழுதுவதும், வாசிப்பதும் ஒரு அலாதியான அனுபவம் தான். அனைவருக்கும் வாய்க்காத சில அரிய வாய்ப்புக்கள் ஒரு சிலருக்கு மட்டும் அபூர்வமாகக் கிட்டும். அப்படி ஒன்று எனக்கு கிடைத்திருப்பதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் கிடைத்ததும் எனது பாக்கியம்.
இதை நான் எழுத ஆயத்தமாகும் போது எனது வலையுலக தோழர்களிடம் இது சரியாக வருமா என சோதித்தேன், அவர்களிடம் இருந்து ஆரோக்கியமான பதில்கள் கிடைத்ததால் இதனை எழுத எத்தனிக்கிறேன். இதை ஒரு சுயபுராணமாக தம்பட்டம் அடித்து கொள்வதற்காக எழுதவில்லை, அப்படி எங்கேனும், யாருக்கேனும் தோன்றினால் தயவு செய்து சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
சரி, இனி (கடலுக்குள்) தொடருக்குள் பயணிப்போமா???
நானும் ஒரு காலத்தில் அனைவரையும் போல, தண்ணீரில் நீந்தும் மீன்களையும், நண்பர்களையும் கரையிலிருந்து ரசித்தவன் தான். ஒரு முறை பட்டப்படிப்பின் போது (விலங்கியல், APSA கல்லூரி, திருப்புத்தூர்) NSS முகாமில், குளத்தில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி நண்பர்களால் காப்பாற்றப் பட்டு உயிர் பிழைத்த அனுபவமும் உண்டு. அதிலிருந்து “சீ ... சீ ... இந்த பழம் புளிக்கும்” என ஒதுங்கி விட்டேன்.
பிறகு, பட்டமேற்படிப்பிற்காக, காரைக்குடி அழகப்பா பல்கலையில் சேர்ந்த பொழுதும் (கடலியல் படிப்பு), படிப்பின் நிமித்தம் அடிக்கடி கடற்கரைக்கு சென்ற போதும் எனது கடல் ஆர்வம் கரையோடு தான் இருந்தது. படகில் ஆய்வுக்காக செல்லும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்து கொண்டு தோழிகள் முன் பயத்தை வெளிகாட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகள் இருக்கிறதே . . . அப்பப்பா !!!.
இவையெல்லாம், கொஞ்ச நாட்களுக்குத் தான். பட்டமேற்படிப்பு முடித்து, முனைவர் படிப்பிற்காக, மதுரை காமராஜர் பல்கலையில் நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். நான் தேர்வு செய்யப் பட்டதாகவும், ஆனால் இரு வாரம் கழித்து இராமேஸ்வரத்தில் நீச்சல் தேர்வு இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டது.
அரைமனதாக சொந்த ஊருக்கு வந்தேன் (திருப்புத்தூர்). ஊரில் நீச்சல் பழகலாம் என்றால் குளங்கள் நிறைய உண்டு ஆனால் எதிலும் தண்ணீர் இல்லை அவ்வளவு வறட்சி!. அப்பொழுது தான், அருகில் காரைக்குடியில் ஒரு நீச்சல் குளம் புதிதாகத் துவங்கி உள்ள செய்தி அறிந்தேன். உடனே அங்கு சென்று, எனக்கு ஒரு வாரத்தில் நீச்சல் கற்று தர முடியுமா? எனக் கேட்டேன். அவர்களும், உங்களுக்கு ஆர்வமிருந்தால் ஒரு நாளில் கூடக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆர்வப்படுத்தினர்.
அடுத்த நாள் அதிகாலை, அவர்கள் கூறிய படி நீச்சலுடை அணிந்து சென்றால், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அது . . . அடுத்த பதிவில் . . .
நன்றியுடன்
வில்சன்

Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
என்ன அதிர்ச்சி எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு பாஸ்
சரி சரி சீக்கிரமா சொல்லுங்க ..!! நல்லா இருக்கு ..!!
என்னது அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க தல
சீக்கிரம் அடுத்தது ! அடுத்தது
அண்ணே கியரப்போட்டு டாப் ஸ்பீடுல போறீங்க.
இது.. இது.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்....
இனி மாப்ஸ் ஆட்டம் ஆரம்பம்....
பதிவுலகை கண்டிப்பாய் புரட்டிப் போடணும் மாப்ஸ்! அடிச்சி தூள் கிளப்புடா...!
என்ன அதிர்ச்சி, தண்ணீர் இல்லாம நீச்சல் அடிக்கனுன்னு சொல்லிடாங்களா!!!
என்ன அதிர்ச்சி,
சீக்கிரமா சொல்லுங்க ..!! நல்லா இருக்கு ..
//பதிவுலகை கண்டிப்பாய் புரட்டிப் போடணும் //
en intha kolai veri
//என்ன அதிர்ச்சி, தண்ணீர் இல்லாம நீச்சல் அடிக்கனுன்னு சொல்லிடாங்களா!!! //
):
வந்து வாழ்த்திய(?????) அனைவருக்கும் நன்றி. நீச்சல் தண்ணியிலே அடிச்சேனா? இல்லை தரையில் அடிச்சேனா? என்று பொறுத்து இருந்து பார்ப்போமே!!!
@@@@dheva பதிவுலகை கண்டிப்பாய் புரட்டிப் போடணும்//இது என்ன தோசையா புரட்டி போடுறதுக்கு
மாப்ஸ்! அடிச்சி//வன்முறை கூடாது
தூள்//படம் வந்து ரொம்ப வருசம் அச்சு
கிளப்புடா// இது என்ன வண்டியா கிளப்புவதற்கு
//சௌந்தர்//
அய்யாவு...என்ன ஆச்சு? ஏன் இந்த கொலைவெறி???
when u became a writer
Post a Comment