என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Thursday, July 8, 2010

இயந்திரப் பறவை - பாகம் 2

                                       
                                                      கதைக்குள் செல்லும் முன் . . . .

                              என்னை கை பிடித்து இழுத்து வந்து, உங்களுக்கு அறிமுகப் படுத்தி, ஓரமாய் நின்று புன்னகை செய்யும் என் அன்பு நண்பனும், கல்லூரித் தோழனுமான, மாப்ஸ் தேவாவுக்கு நன்றி சொல்லி . . .    முதல் கதையிலேயே  என்னை பிரபல பதிவர் அந்தஸ்துக்கு உயர்த்திய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி நன்றியுடன் பயணிக்கிறேன்.

அன்புடன்

வில்சன்


முன் கதை


             ஒரு வழியா துபாய் வந்து வேலையில சேர்ந்தேன். ஒரு வருஷமும் ஓடிருச்சு, ஊருக்கு போக லீவு குடுத்தானுங்க. நமக்குத்தான்  பிளேன்ல போய் அனுவம் வந்துருச்சுல...உடனே ஏஜெண்ட்கிட்ட போய் ஜன்னல் ஓர சீட்டா ரிசர்வ் பண்ணச் சொல்லி டிக்கெட்ட வாங்கிக்கிட்டேன் (எல்லாம் சக பயணி குடுத்த ஐடியாதான்).

               உள்ளே ஏறி உக்காந்து, வீட்டுக்கு போனப் போட்டு “அப்பா பிளேன் ஏறிட்டேன், இன்னும் மூணு மணி நேரத்துல லேண்டாயிருவேன்” னு ஆத்தா நான் பாசாயிட்டேன் கணக்கா கத்தினேன். செல்போனை  எல்லாம் அணைக்க  சொல்லி மைக்ல சொல்லியும்  ரொம்ப பேரு  சட்ட  பண்ணவே இல்ல. உள்ள  இருந்த எல்லாருக்குமே பிளைட் அனுபவம் இருந்ததால அந்த பொண்ணுங்க பாடு ரொம்ப திண்டாட்டமாயிருந்துச்சு. ஏனோ இப்ப  அந்த பொண்ணுங்க மேல எனக்கு பரிதாபம் வரலை.

                ஒரு வழியா பிளேன் ஒரு வட்டமடுச்சு வானத்துல ஜிவ்வுனு ஏறுச்சு. வயிரெல்லாம் கூச, ஜன்னல் வழியா கட்டடங்கள் எல்லாம் சின்னதாகி ஒரு புள்ளியா மறைய ஆரம்பிக்கிறதைப் பார்த்துக்கிட்டு  லைட்டா கண்ணசந்தேன். நெனப்பு எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பார்க்கப் போற சம்சாரத்த  சுத்தியே வந்துச்சு, இந்நேரம் அப்பா, அம்மா, மாமனார்  வீடுனு  ஒரு பட்டாளமே கிளம்பி  ஏர்போர்ட்டுக்கு வந்துகிட்டுயிருக்கும்.

           நல்லா தூக்கத்துல இருந்தவனை "எல்லாரும் பெல்ட்ட போட்டுக்கங்க ஊர் நெருங்கிருச்சு" னு மைக் அலறி  எழுப்பி விட்டுச்சு. வெளியே எட்டிப் பார்த்தேன், மேகங்களின் உள்ளாற  பிளேன்  போறதைப் பார்க்கும்போது, அது  தேங்காப்பூத்  துண்டுலத்  தலையத் துவட்டிக்கிற‌ மாதிரியிருந்துச்சு.

                      கட்டடங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்க, மனம் தனியே பறக்க ஆரம்பிச்சுருச்சு. ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல பிளேன் நெருங்கும் போது மறுபடியும் வெளியே பார்த்தேன், பிளேன்ல உரசுர   அளவுக்கு நிறைய செல்போன் டவர்கள் இருந்துச்சு. விஞ்ஞானம் வளர  வளர உலகம்  ரொம்பத்தான்  சுருங்கிப்  போயிருச்சு.

                    ஒரு காலத்துல எங்க ஊர் போஸ்டாபிஸ்ல மட்டும்தான் போன் இருக்கும். மிலிட்ரிகாரங்க வீட்டுக்கும், மலேயாகாரங்க வீட்டுக்கு  மட்டும் எப்பவாச்சும் போன் வந்துருக்குனு கூப்புட்டு விடுவாங்க. இப்ப  என்னடானா பூ  விக்கிற ஆயாலருந்து எல்லார்  கையிலயும் செல்போன் புழங்குது.

                  இப்படி யோசிக்கும் போதே சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு. அது வேறொண்ணுமில்ல... அதுதான் டவர் எல்லாம் பக்கத்துல தெரியுதே... அப்போ கண்டிப்பா செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். எறங்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி வீட்ல ஆச்சரியப் படுத்துலாமுனு ஒரு சூப்பர் பிளான் (எப்பூடி?)

               உடனே போன எடுத்து ஆன் பண்ணேன், சிக்னல் ஃபுல்லா இருந்துச்சு, அட! நமக்கு கூட மூளை வேலை செய்யுதேனு பெருமைப் பட்டுகிட்டேன். நம்பர டயல் பண்ணி காதுல வச்சேன், ரிங் போற மாதிரி தெரியல. அதுக்குள்ள பிளேன் ரன் வே கிட்ட வந்துருச்சு . . அடச் சே . . பறக்கும் போதே போன் பண்ணி அசத்தலாம்னா இப்படி சதி பண்ணுதேனு நொந்துகிட்டே ரீடயல் போட்டேன்.

                    அப்போ தீடீருனு பிளேன் குலுங்குச்சு, பயங்கர சத்தம் வேற, ஒன்னுமே புரியல. இறங்குன பிளேன் மறுபடியும் மேலே கிளம்புர மாதிரியிருந்துச்சு, பார்த்தா ரன் வேயை தா...ண்....டி....  காம்பவுண்ட் செவுத்துல மோதி நான் உக்காந்துருந்த சீட் கிட்ட கரெக்ட்டா  ரெண்டு  துண்டா ஒடஞ்சுச்சு. நான்  பயந்து போய் பெல்ட்ட கழட்டிட்டு  அப்படியே கீழ குதிச்சேன். ஒரு செகண்டுதான், பிளேன் பயங்கர சத்தத்துல வெடிச்சு சிதறிருச்சு.


- ‍‍‍‍நாளைக்கு கண்டிப்பாக நிறைவு பெறும்


அன்புடன்

வில்சன்
 
 
 
 
 

15 comments:

Unknown said...

http://blogintamil.blogspot.com/2010/07/blog-post_09.html

School of Energy Sciences, MKU said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி செந்தில்!!

Mahi_Granny said...

சந்தோஷமா போய் இறங்கி கதையை முடிப்பியியா , தொடரும் போட்டு மங்களூர் பிளேன் கதை போல, suspence வைச்சுட்டியே . தேவாவுக்கு friendaa .ஒ.கே. அப்போ எனக்கும் உறவு தான். நல்லா இருக்கு தம்பி

சிறுகுடி ராம் said...

///மேகங்களின் உள்ளாற பிளேன் போறதைப் பார்க்கும்போது, அது தேங்காப்பூத் துண்டுலத் தலையத் துவட்டிக்கிற‌ மாதிரியிருந்துச்சு. ///

எங்கிட்டு இருந்து மாப்ள இந்தமாதிரி உவமைகள் எல்லாம் கெடைக்கிது... பிச்சு உதர்ற போ.. ஹஹாஹா

சிறுகுடி ராம் said...

ரொம்ப சஸ்பென்ஸ் ஆன எடத்துல தொடரும் போட, மாப்பு தேவாகிட்டயிருந்து கத்துக்கிட்டியா மாப்ஸ்.. ம்ம்ம்ம் அதுகூட நல்லாத்தான் இருக்கு... ஆனா சீக்கிரம் கதைய முடி மாப்ஸ்... எனக்கே சஸ்பென்ஸ் தாங்கமுடியல....
வாழ்த்துக்கள்!!

Saran said...

நல்லா இருக்கு வில்சன். ரொம்ப நல்லா எழுதிருங்கள். உங்கள் துறை சம்பந்தமாவும் எழுதுங்கள். படிக்க ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். வாழ்க.
சரவணன்
சிங்கப்பூர்

dheva said...

உடலில் இருந்து...
உயிர் பிரிப்பேன்...
அதில் உனை நிறைப்பேன்...
அதை நட்பென்பேன்...
காதெல்ன்பேன்...
சுவாசமென்பேன்...

மாப்ஸ்....என் கல்லூரி கால கனவுகளையும், காதல்களையும், கலாட்டாக்களையும் நெருக்கமாய் உணர்ந்தவனே........உன் எழுத்தில் நம்ம ஊர் வாசம் சும்மா சுத்தி சுத்தி அடிக்குது....பாட்டி மெஸ் மீன் குழம்பு மாதிரி...

சும்மா அதிர்ற மாதிரி.....தொடரும் போடுற...மாப்ஸ்.......சாத்து சாத்துனு சாத்துறடா....


அடுத்த பாகம் நாளைக்காப்பு......வெட்யிட்ட்டிங்கு....மாப்பு...!

விஜய் said...

வில்சன் நீங்க புதுசா எழுதுற மாதிரி தெரியல , அசத்தி இருகீங்க
,
எதோ சுமூகமா முடியற அனுபவம்னு பார்த்தா , கடைசியில் ஒரு பெரிய இடிய தூக்கி தலையில் போட்டுடீங்க , சீக்கிரம் தொடருங்க , என்ன ஆச்சுன்னு ஆவலா பாத்துகிட்டு இருக்கோம் ...

நிஜமா நீங்க அழகா எழுதுறீங்க வில்சன்

ஜில்தண்ணி said...

என்னது ரெண்டா பொளந்துடுச்சா
நல்லாயிருக்கு தல
சீக்கிரம் அடுத்தது ?

ஜீவன்பென்னி said...

romba payamaa irukku... flight vedichuduchu, aduthu enna nadakkap pogutho....

எல் கே said...

தேவாவின் அறிமுகம் என்றும் வீண்போனதில்லை. / அருமையான நடை. படிக்கத் தூண்டுகிறது வில்சன்

எல் கே said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

தேவா அண்ணன் கூட சேர்ந்த இப்படிதான் அடுத்த பதிவு அடுத்த பதிவு என்று போய்கொண்டு இருக்கும்.

என்ன ஆச்சுன்னு ஆவலா பாத்துகிட்டு இருக்கோம் ...

MK said...

Nice writing anna.

penile implant said...

That is great to hear, thank you for reading!