என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Wednesday, July 21, 2010

கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-2)


வணக்கம் சகா!

இது வரை


அந்த அதிர்ச்சி . . . எனது சக பயிற்சி வீரர்களெல்லாம் சுள்ளான்கள்! அனைவருக்கும் ஆறு முதல் பத்து வயதுக்குள் இருக்கும். அவர்கள் அனைவரும் எனது முழங்காலுக்கு கீழே தான் இருந்தனர். நான் மட்டும் இருபத்தைந்தை கடந்தவனாய் இருந்தேன். அது போக, சுள்ளான்கள் எல்லாம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியில் சேர்ந்து, அடுத்த கட்டத்தை எட்டி இருந்தனர். நான் தத்தளிப்பதை பார்த்து அவர்கள் “அண்ணே, இப்டி அடினே, காலை அப்டி உதைனே” என்று சொல்லி கொடுக்க துவங்கினர். எனக்கு ஒரே வெட்கமாய் இருந்தது, இருந்தாலும் வேறு வழியில்லை சவாலாக எடுத்து சாதித்தேன்.

ஒரு வாரத்தில் என்னை நன்றாகப் பயிற்றுவித்தனர். பயிற்சி முடிந்ததும், பயிற்றுநரிடம் நன்றி சொல்லி விட்டு, இந்த மாதிரி நான் கடல் ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறேன், இன்னும் ஒரு வாரத்தில் இராமேஸ்வரத்தில் எனக்கு நீச்சல் தேர்வு இருக்கு என்றேன். அவரோ, “நல்ல தண்ணீரில் நீச்சல் அடிப்பது வேறு, கடலில் நீச்சல் அடிப்பது வேறு, இப்பொழுது நீங்கள் கற்றது எல்லாம் கடல் கிட்ட செல்லாது” என்று தன் பங்குக்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

ஹ்ம்ம்ம் ... !!! கழுதைக்கு வாக்கப்படும்னு விதி! உதை வாங்காம முடியுமா? என்று எண்ணிக் கொண்டு, இராமேஸ்வரம் அருகில் உச்சிபுளியில் இருந்த எனது சகோதரி வீட்டுக்கு கிளம்பினேன். அதுவும் ஒரு கடற்கரை கிராமம் தான். அங்கு சென்று, அருகிலுள்ள காமராஜர் பல்கலையின் ஆய்வுகூடத்திற்கு (புதுமடம்) சென்றேன். அங்கே, மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் அலுவல உதவியாளராக இருக்கிறார். எனது நேர்காணலின் போது அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன்.

அதுக்கென்ன? ஒரு வாரம் டயம் இருக்கில்ல? வாங்க ஒரு கை பார்த்து விடுவொமென்று உற்சாகப் படுத்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் கடற்கரைக்கு அவருடன் செல்வேன். அவரை எனது மானசீக குருவாய் ஏற்று அவர் சொல்லிக் கொடுத்த நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இரண்டாம் நாள் பயிற்சியின் போது, என்னை நீந்தியவாறு கைத்தாங்கலாய் கடலுக்குள் கூட்டிச் சென்றார். கடல் நடுவே ஒரு இரும்பு கம்பி ஒன்று ஊன்றி இருந்தார்கள், அதை பிடிக்க சொல்லி விட்டு சற்றும் எதிர்பாராமல் முங்கு நீச்சலில் கரைக்கு திரும்பி விட்டார்.

அந்த கம்பி முழுதும் சிப்பிக்கள் பிடித்து கரடுமுரடாக இருந்தது. கை வேறு ஏற்கனவே கடல் நீரில் ஊறி இருக்க, சிப்பிக்கள் கையை பதம் பார்க்கத் துவங்கின. பிடிக்கவும் முடியவில்லை, விட்டால் மூழ்கி விடுவேன் என்று பயம் வேறு. அவரை நோக்கி “முடியல . . . கை வலிக்குது...” என்று கத்தினேன். “வலிச்சா விட்டுடுங்க” என்று அவர் திருப்பிக் கத்தினார்.

இன்னிக்கு என்ன ஆனாலும் சரி, உயிரை பணயம் வைத்து விட வேண்டியதுதான் என்று கையை விட்டு விட்டு கரையை நோக்கி நீந்தினேன். அவர் கரையிலிருந்து என்னைப் பார்க்கிறாரா என்று அடிக்கடி உறுதிப் படுத்திக் கொண்டேன். அப்படியா விட்டு விடப் போகிறார்? என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் நீந்தி கரை சேர்ந்தேன்.

கைகள் ரெண்டிலும் ரத்தக் கீறல்கள், அதில் கடல் நீரின் உப்பும் சேர, ஒரே எரிச்சல் வேறு. அந்த ஆளைப் பார்த்து வாய்க்குள்ளேயே கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டேன். பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் சுண்ணாம்பு எடுத்து அதில் தேங்காயெண்ணை கலந்து தேய்க்க சொன்னார். “நாளைக்கு காலைல பாருங்க பட்டுப் போயிடும்” என்றார்.

அடுத்த நாளும் அதே மாதிரி அதிரடி பயிற்சி தான். மூன்றே நாளில் முழுக்கத் தேறிவிட்டேன். நம்பிக்கை துளிர்த்தது எனது மானசீக நீச்சல் குருவிடம் நன்றி சொல்லி மதுரை கிளம்பினேன். அங்கிருந்து மீண்டும் இராமேஸ்வரம் போக வேண்டும்.

அடுத்த பதிவில் இராமேஸ்வரம் போவோமா? . . . .



நன்றியுடன்



வில்சன்



12 comments:

பனித்துளி சங்கர் said...

உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்த ஒரு உணர்வு அருமை . பகிர்வுக்கு நன்றி . அடுத்த வாரம் கண்டிப்பா வந்துவிடுவேன் .

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பயண பதிவு.....வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பயண பதிவு...
சேர்ந்து பயணித்த ஒரு உணர்வு..
வாழ்த்துகள்

Anonymous said...

நல்லா இருக்கு வில்சன்..
வாழ்த்துகள்..

natpudan,
balaji

சௌந்தர் said...

ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்....இபோதுதான் விறு விருப்பு வந்துள்ளது கலக்குங்கள்..

சாரி எனக்கு வேலை இருக்கு நீங்க மட்டும் இராமேஸ்வரம் போயிட்டு வாங்க ok

ஜில்தண்ணி said...

செம அனுபவங்கள்

சொல்கிற நடையும் அருமை :)

சீக்கிரம் தொடரும் நண்பா

ஜீவன்பென்னி said...

ஒரு வழியா கரைக்கு வந்தீங்களே. கொஞ்சம் பயந்தே பேனேன்.

School of Energy Sciences, MKU said...

நன்றி
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫, rk guru, வெறும்பய, Balaji saravana, சௌந்தர், ஜில்தண்ணி - யோகேஷ் மற்றும் ஜீவன்பென்னி.
தங்கள் அனைவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இந்த பதிவின் வெற்றிக்கு உறுதுணை.

Anonymous said...

விறுவிறுப்பு ஆரம்பமாகி விட்டது.அனுபவத்தை சொல்வதில் நல்ல எழுத்து நடை தெரிகிறது.பாரட்டுகள்

pinkyrose said...

எப்ப ராமேஸ்வரம்? தனுஸ்கோடி உண்டா?

செல்வா said...

கண்டிப்பா போலாம்க ...
நல்லா இருக்கு .. இம்பூட்டு கஷ்டப்பட்டா நீச்சல் கத்துக்கிட்டீங்க ..???

Chitra said...

உங்கள் அதிரடி பதிவை வாசித்தேன். சூப்பர்ங்க! உங்கள் focus - நெஞ்சுறுதி எல்லாம் கொண்டு சாதிச்சிட்டீங்க... பாராட்டுக்கள்!
தொடருங்கள்!