என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Thursday, July 8, 2010

இயந்திரப் பறவை - பாகம் 1


எங்க ஊரு பெரிய சிட்டியெல்லாம் கெடயாது, சாதாரண டவுன் தான். அதுனால ஏரோப்பிளேனயெல்லாம் நாங்க பார்க்குறதுக்குனா, மதுரைக்குப் போனா தான் உண்டு. எப்பவாச்சும் காரைக்குடி யுனிவர்சிட்டி விழாவுக்கோ, இல்லாட்டி தேர்தல் கூட்டத்துக்கோ ஹெலிகாப்டர் எங்க ஊர் வழியா போகும். அந்த சத்தம் கேட்டா போதும், எல்லாருக்கும் குஷிதான், சாப்புடுற சோத்தக் கூட அப்படியே விட்டுட்டு பொட்டலுக்காவது இல்லாட்டி மொட்டமாடிக்காவது ஓடுவோம். ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது. எல்லாரும் ‘ஆ‍ஆ‍’- னு அன்னாந்து பார்த்து ஆளாளுக்கு ஒரு ஏரோப்பிளேன் கதய அள்ளி விடுவாங்க. நாங்கூட பசங்க கிட்ட ‘என்னப் பார்த்து ராஜீவ் காந்தி கையக் காட்டுனாரு’னு அளந்து விடுவேன். அதயும் கேக்க ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கும். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எங்க ஊருல ரெண்டு மூணு வீட்டுலதான் மொட்ட மாடி ரொம்ப உயரமா இருக்கும். அதுனால பசங்க எல்லாரும் எங்க‌ மாடியில இருந்துதான் எப்பவும் பிளேன் பார்ப்போம். ராத்திரியில‌ அப்பா அம்மா கூட மாடியில நெலாச்சோறு சாப்புட்டுக் கிட்டே ரொம்ப உசரத்துல நட்சத்திரம் மாதிரி மினுக்கிட்டே அமைதியா போற‌த கண்கொட்டாம ரசிப்பேன். அப்பாகிட்ட அடிக்கடி நான் கேக்குறதுலாம் ஒண்ணே ஒண்ணுதான் 'எப்பப்பா என்னை அதுல கூட்டிட்டு போவீங்க?'


என்னை சமாதானப்படுத்த ஒரு பொம்மை பிளேன் வாங்கி குடுத்தாரு. அது பறக்காது, ஆனா, அச்சு அசல் பிளேன் மாதிரியே சத்தம் குடுத்துக்கிட்டு சுத்தி சுத்தி வரும். ரொம்ப நாள் வரை அதை பத்திரமா வச்சுருந்தேன். இப்படி, என்னோட பிளேன் காதல் அடங்கவேயில்ல. பெரியாளானதும் ஒரு தடவையாவது அதுல பறக்கனுமுனு ஒரு தீராத வெறி. அப்புறம் மெட்ராஸ்க்கு பஸ்ல போகும் போதெல்லாம் திருச்சிலயும், மெட்ராஸுலயும், ஏர்போர்ட்ட பார்க்க தவற மாட்டேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு மெட்ராஸ்ல‌ (மாமனார் ஊருங்க) வைஃப் கூட ஊர் சுத்துரப்பக் கூட பிளேன் சத்தம் கேட்டா என்னையும் அறியாம மேல பார்ப்பேன். அந்த இயந்திரப் பறவை மேல அப்படி ஒரு பைத்தியம். என்னாலக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நமக்குதான் வயசாகுதே தவிர ஆசைக்கு இல்லியே. என்னைக்கு அதுல ஏறிப் பறக்கப் போறோம்னு எதிர்பார்த்துக் கிட்டேயிருந்தேன். அந்த நாளும் வந்தது . . . அட ஆமாங்க . . . எனக்கு துபாயில வேலை கிடைச்சிருச்சு. அப்படியே வானத்துல தனியாப் பறக்குற மாதிரியும் தட்டாமாலை சுத்துர மாதிரியும் இருந்துச்சு. ஒரு பக்கம் புதுப் பொண்டாட்டிய விட்டுட்டுப் போற கவலைனா இன்னொரு பக்கம் நீண்ட நாள் கனவு நனவாகப் போற சந்தோஷம். ஒரு குட்டி “ஊரே” வந்து வழியனுப்ப பிளேனுக்குள்ள ஏறுனேன்.

அடுத்து உக்காந்து இருந்தவன் எனக்கு பக்கத்து ஊருக்காரனாம், ஆறு வருஷமா துபாயில இருக்குறானாம். எப்படி பெல்ட் போடனுமுனு எல்லாம் சொல்லிக் குடுத்தான். நானும் அவனை கவனிக்கிற மாதிரியே ஏர்ஹோஸ்டஸ சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு சாப்பாடு குடுக்கும் போது டம்ப்ளர் தவறி கீழே விழுந்துருச்சு, உடனே நான் பதறிப் போய் அதை எடுக்கக் குனுஞ்சேன். உடனே அவன் தடுத்துட்டு “வேற கிளாஸ் குடு” னு அந்த பொண்ண “மெரட்டுற” மாதிரி சொன்னான். அதுக்கப்புறம் எங்கிட்ட ரகசியமா “சும்மாவா? . . . காசு குடுக்குறாமுல?” னு கிசுகிசுத்தான். “நீ புதுசுங்குறதுனால அவளுங்கள வாயப் பொளந்துக்கிட்டு பாக்குற, அடிக்கடி பறந்தீனா உனக்கும் அவளுங்களை மிரட்ட பழகிடும், வேணும்னா பின்னாடி திரும்பிப் பாரு கூத்த” னான். பின் சீட்ல ஒருத்தன் தலை வைக்கிற எடத்துல எண்ணைப் பிசுக்கு ஒட்டாமயிருக்க ஒரு வெள்ளைத் துணி இருக்குமே, அது அழுக்காயிருக்கு இன்பெக்சன் ஆகும் உடனே மாத்துனு கத்திக்கிட்டியிருந்தான். அந்த பொண்ணு ‘பிளேன் கிளம்பப் போகுது, எடத்துல உக்காந்து பெல்ட்டப் போட்டுக்குங்க’ னு சொல்ல சொல்ல இன்னொருத்தன் காதுலயே வாங்காம பாத்ரூமுக்கு எந்துருச்சு போனான். சரக்கு குடிக்க குடுத்தப்ப ‘இன்னொரு கிளாஸ் குடு’ னு குடிமகன் ஒருத்தன் கிளம்பினான். ‘வீடியோ தெரியல . . ரேடியோ சவுண்டாயிருக்கு . . ஏஸி கூலிங் இல்லை’ னு ஆளாளுக்குப் படுத்தியெடுத்துட்டானுங்க. எனக்கு அந்த பொண்ணுங்களப் பாக்க பாவமாயிருந்துச்சு. பிளேனும் கிளம்புச்சு . . உடனே ஊர்க்காரனைத் தாண்டி ஜன்னல் வழியா எட்டி எட்டி வெளிய பார்த்தேன். “ரிசர்வ் பண்ணும் போதே ஜன்னல் சீட் வேணும்னு கேக்கலயா” னான். நமக்கு எங்க அதெல்லாம் தெரியும்னு நொந்துக்கிட்டேன்.

.... அடுத்த பதிவில் நிறைவுறும் . . .

21 comments:

சிறுகுடி ராம் said...

சூப்பரா இருக்கு மாப்ஸ்.. அப்படியே என்னைய அந்த காலகட்டத்துக்கே கூட்டிட்டு போயிட்ட....

///ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது.///
இந்த வரியை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்... ஹஹாஹா

Thenammai Lakshmanan said...

super issue... thx for sharing..:))

ஜில்தண்ணி said...

நானும் இப்படித்தான் வாய பொலந்துகிட்டு பாத்துக்கிட்டு இருந்தேன்,நீங்களாவது ஏரோப்ளேன் ஏறி பாத்துட்டீங்க,நான் இன்னும் இல்ல :) எப்பதான் அந்த பாக்கியம் கிடைக்குமோ,தொடருங்கள்

Jey said...

|||அந்த சத்தம் கேட்டா போதும், எல்லாருக்கும் குஷிதான், சாப்புடுற சோத்தக் கூட அப்படியே விட்டுட்டு பொட்டலுக்காவது இல்லாட்டி மொட்டமாடிக்காவது ஓடுவோம். ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான்.|||

hahahahaaa, same blood!!:)

Jey said...

pls remove word verification.

School of Energy Sciences, MKU said...

எனது எழுத்துக்களை பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி

விஜய் said...

அசத்தி இருக்கீங்க வில்சன் ,

இது அத்தனை பேருக்கும் இருந்த தீராத மோகம் தான் .அதை அழகா எங்கள கண்சிமிட்டாம படிக்க வைச்சு இருக்குற விதம் மிக அருமை

இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

///ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது.///


arumaiyaana pakirvu

ஜெயந்த் கிருஷ்ணா said...

///ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது.///

அசத்தி இருக்கீங்க

இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

ஜீவன்பென்னி said...

நான் முதல் முறை வர்றப்போ பக்கத்துல இருந்தவரு பயந்துபோய் சன்னல் சீட்ட என்கிட்ட கொடுத்துட்டாரு.அதுக்கப்புறம் எப்பவுவே சன்னல் சீட்டுதான். எமர்ஜென்சி எக்சிட் கிட்ட ஒருத்தரும் உட்கார பிரியப்பட மாட்டாங்களான்னு தெரியல எப்போ நான் சன்னல் சீட் கேட்டாலும் எக்சிட் சீட் ஓக்கேவான்னு கேக்குறாய்ங்க. என்ன அம்மனிங்க தனியா வந்து நம்ம கிட்ட எக்ஸ்ரா கேரோட வெளக்கங்கொடுக்கும்.

ஜீவன்பென்னி said...

பிரபல பதிவர் ச்ச்சே(மனசு சொல்லுதுங்க, நெசமாவே)... புதிய பதிவர் வில்சன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

School of Energy Sciences, MKU said...

ஜீவன்பென்னி ---- ‍‍‍எமெர்ஜென்சி எக்சிட்டுக்கு இவ்வளவு மவுசா?? அடுத்த முறை முயற்சி செய்றேன்
அப்புறம் நீங்க கொஞ்சம் ஓவரா என்னை புகழுரீங்க. இருந்தாலும் டானிக் குடிச்ச மாதிரி இருக்கு. மிக்க நன்றி

dheva said...

//அடுத்து உக்காந்து இருந்தவன் எனக்கு பக்கத்து ஊருக்காரனாம், ஆறு வருஷமா துபாயில இருக்குறானாம். எப்படி பெல்ட் போடனுமுனு எல்லாம் சொல்லிக் குடுத்தான். நானும் அவனை கவனிக்கிற மாதிரியே ஏர்ஹோஸ்டஸ சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன்.//

இதை நீ சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியது இல்லா..... ஆட்டோமேடிக்கா நடக்குற வேலைதானே மாப்ஸ்!


வேற என்னடா... பதிவுலகக்த்துல என்ரீ ஆகிட்ட....அட்டகாசாமான மக்களுக்கு விழுப்புணர்வூட்டும் விதமா நிறைய எழுது.... மாப்ஸ்.....! வானமே எல்லை... கலக்கு மாப்ஸ்!

அப்ஸா... காலேஜ்ல படிச்ச பயலுக எல்லாம் அறிவாளிகட.....(மாப்ஸ.. நம்ம புரஃபசர் யாரும் பிளாக் பக்கம் வரமாட்டங்கன்னு நினைக்கிறேன்....வந்தா... நம்ம வண்டவாளம்.. கூ...கூ.. ஜிகு புகு.. ஜிகுபுகு)

வாழ்த்துக்கள் மாப்ஸ்!

செல்வா said...

வாங்க .. வரும்போதே இயந்திரப்பறவைல வந்து இறங்கிருக்கீங்க போல ..
தொடர்ந்து எழுதுங்க.. அப்புறம்
// எனக்கு அந்த பொண்ணுங்களப் பாக்க பாவமாயிருந்துச்சு.///
அம்புட்டு நல்லவரா நீங்க...??!!??

School of Energy Sciences, MKU said...

என்னை வலைப்பதிவு ஆரம்பிக்க மிகவும் ஊக்கமூட்டிய மாப்ஸ் தேவாவுக்கு நன்றிகள் பல. மற்றும் ஊக்குவிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

Super. ungal ezuththil Chettinattu vaasam appadiye therikirathu. vazhththukkal.

AltF9 Admin said...

Sinkam kalam irankiruchu , nee asathuna tambi irukken , tambi udaiyaan padaikku anchan , avvvvvvvvv, ini tadiyal arampam....

சௌந்தர் said...

வாங்க எங்க ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கள் வாழ்த்துகள்......

Kousalya Raj said...

கலக்கிடீங்க ....வாழ்த்துகள்

மங்குனி அமைச்சர் said...

நல்ல சரளமா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்

கண்ணகி said...

ஆமாங்க..ஏறும்வரை அதிசயம்தான்...நல்ல எழுத்துநடை.